Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொண்டை வலி, இருமல், சளியை சட்டுனு விரட்டியடிக்கும் சூப்பர் டீ... 

Nandhinipriya Ganeshan November 18, 2022 & 15:31 [IST]
தொண்டை வலி, இருமல், சளியை சட்டுனு விரட்டியடிக்கும் சூப்பர் டீ... Representative Image.

மழைக்காலம் வந்துவிட்டால் நோயும் கூடவே வந்துவிடுகிறது. மழைக்காலத்தில் நம் வீட்டில் ஒருவருக்காவது சளி, காய்ச்சல் வந்து ஆளைப்போட்டு பாடாய் படுத்திவிடும். அதனாலையே மழைக்காலத்தில் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், கிருமிகள் எளிதில் பரவும் நேரம் இது. முடிந்த வரை இனிப்பு பலகாரங்களை தவிர்ப்பது நல்லது. தண்ணீரைக் கூட கொதிக்க வைத்து வடிகட்டி, ஆறவைத்து பருகுவது நல்லது. 

நம்மில் பலருக்கும் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நோயெதிர்ப்பு சக்தி இருப்பதில்லை. இதனால், தொண்டை வலி, சளி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறோம்.  அப்படிபட்டவர்கள் துளசி மற்றும் பொதினாவை சேர்த்துக் கொண்டால், உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்த்தொற்றில் இருந்து விரைவில் குணமடையலாம்.

ஏனென்றால், பாரம்பரிய மூலிகையான துளசியில் இருமல், சளித் தொல்லை, ஆஸ்துமா மற்றும் பிற தொண்டை சார்ந்த நோய்களை விரட்டியடிக்கும் சக்தி உண்டு. அதேபோல், பொதினா உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க கூடியது. எனவே இதை இரண்டையும் வைத்து ஒரு டீ போட்டு குடித்தால் எப்படி இருக்கும். 

தேவையானவை:

துளசி - சிறிதளவு

பொதினா இலை - சிறிதளவு

நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

குறிப்பு: நாட்டுச்சர்க்கரைக்கு பதிலாக தேன் அல்லது கருப்பட்டி வெல்லம் கூட சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பமே. 

செய்முறை:

துளசி, பொதினா இரண்டையும் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர், ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் இதை இரண்டையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

உதாரணமாக, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றினால் அது கால் லிட்டராக மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும். கொதித்தவுடன் அதை வடிகட்டி தேன் அல்லது கருப்பட்டி வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரையை தேவையான அளவு கலந்து பருகுங்கள்.

ஒரே நாளில் சளி, தொண்டை வலி, இருமல் எல்லாம் பறந்துபோய் விடும். இது மிகவும் எளிமையான கஷாயம் மட்டுமல்லாமல், உடலுக்கு அத்துனை நன்மைகளை கொடுக்கிறது. இனி, சளி பிடித்தால் இப்படி டீ போட்டு குடிங்க. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்