Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாக்கெட் பாலில் தித்திப்பான சீம்பால் செய்வது எப்படி?

Nandhinipriya Ganeshan November 17, 2022 & 23:00 [IST]
பாக்கெட் பாலில் தித்திப்பான சீம்பால் செய்வது எப்படி?Representative Image.

பால் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு சுவீட் இந்த சீம்பால். பசு கன்று ஈன்ற மூன்று நாட்கள் வரை சேமிக்கப்படும் பாலில் செய்யப்படும் இந்த சீம்பாலில் உடலுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. கிராமப்புறங்களில் இந்த சீம்பால் அதிகம் செய்வார்கள். ஏன், நாம் சிறுவயதில் இருக்கும்போது கூட நம் வீட்டில் பாட்டி செய்துக் கொடுத்து இருப்பார்.

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய உணவுகள்..

ஆனால், இந்த சீம்பால் சாப்பிடுவதற்கு பசு மாடு கன்று போடும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், இனி அப்படி காத்திருக்க வேண்டியது இல்லை. சாதாரண பாலை கொண்டே அருமையான சுவையில் சீம்பால் செய்யலாம். அதுவும் ஈசியான முறையில். எப்போதும் சீம்பால் செய்வதாக இருந்தால் இரவு நேரத்தில் செய்யுங்கள். அப்போது தான் காலையில் கெட்டியான சீம்பால் கிடைக்கும். 

கார்த்திகை தீபத்தன்று சிவபெருமானுக்கு படைக்க வேண்டிய நைவேத்யங்கள்...

பாக்கெட் பாலில் தித்திப்பான சீம்பால் செய்வது எப்படி?Representative Image

தேவையான பொருட்கள்:

கெட்டிப் பால் - 1 லிட்டர் 

பொட்டுக்கடலை பவுடர் - 5 ஸ்பூன்

சர்க்கரை -  3 கப்

சுக்கு பவுடர் - 4 ஸ்பூன்

ஏலக்காய் பொடி - 3 ஸ்பூன்

செய்முறை:

முதலில் சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பவுடர் செய்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன், சர்க்கரை பவுடர், பொட்டுக்கடலை, கார்ன் ஃப்ளார், ஏலக்காய் பொடி, சுக்கு ஆகியவற்று சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள்.

உங்களுக்கு இனிப்பு அதிகமாக வேண்டுமென்றால், சர்க்கரை பவுடரை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது, ஒரு குக்கரில் கால்பாகம் தண்ணீர் சேர்த்து அதற்குள் ஸ்டேண்ட் ஒன்றை வைத்து அதன் மேல் நாம் தயாரித்து வைத்துள்ள கலவையை அப்படியே பாத்திரத்துடன் மேலே தட்டுப்போட்டு மூடி உள்ளே வையுங்கள்.

பின்னர், அந்த தட்டின் மீது நாம் வீட்டில் பூண்டு நசுக்கும் கல் உலக்கு இருக்கும் அல்லவா, அதன் ஆட்டும் கல்லை அந்த தட்டின் மீது வைத்து குக்கரை மூடி போட்டு 5 விசில் விட்டு, திறந்து பாருங்கள். பால் மாதிரி தெரியும். எனவே, மறுபடியும் மூடி விசில் போடாமல் 45 நிமிடம் வரை வேக வையுங்கள். 

45 நிமிடம் கழித்து பார்த்தால் பால் கெட்டியாகி சீம்பால் வெந்திருக்கும். இதை 1 மணி நேரம் ஆறவைத்து இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைத்து காலையில் எடுத்தால் கெட்டியான சுவையான தித்திக்கும் சீம்பால் ரெடி.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்