Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Types of Yoga Asanas in Tamil: உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா அப்ப இந்த யோகா தான் செய்யனும்..!! யோகாசனத்தின் வகைகள் & பயன்கள்..

Nandhinipriya Ganeshan June 19, 2022 & 14:15 [IST]
Types of Yoga Asanas in Tamil: உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா அப்ப இந்த யோகா தான் செய்யனும்..!! யோகாசனத்தின் வகைகள் & பயன்கள்..Representative Image.

Types of Yoga Asanas in Tamil: யோகா என்பது ஒரு பழங்கால உடற்பயிற்சி மற்றும் தியான நிலையாகும். இதை தினந்தோறும் செய்து வருவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை நமது உடலுக்கும் உள்ளத்திற்கும் வழங்குகிறது. மேலும், யோகா உடலையும் உள்ளத்தையும் தியானத்தின் மூலம் இணைக்கிறது. யோகாவின் உடல் மற்றும் மன நன்மைகளின் காரணமாக, பலரும் வாழ்நாளில் தொடர்ந்து இந்த யோகாவை செய்துவருகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தம் குறைந்து உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 

அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் (Yoga Day 2022) கொண்டாப்படுகிறது. அதன்படி, சர்ச் அரௌண்ட் வெப் யோகாவின் வகைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் தெளிவாக கொடுத்துள்ளது. இதை படித்து நீங்களும் தினமும் யோகா பயிற்சியை செய்து பயனடையுங்கள்.

யோகாவின் வகைகள் மற்றும் பயன்கள்: 

ஷலபாசனம் (Shalabhasana Benefit)

உடலில் இருக்கும் பின்புற தசைகளை வலுப்படுத்துவதில் மிகவும் சிறந்த ஆசனம் இதுவாகும். நீங்கள் தினமும் அதிகமான முதுகுவலியால் அவதிப்படுப்பவர்களாக இருந்தால், இந்த ஷலபாசனத்தை தினமும் பொறுமையாக பயிற்சி செய்யலாம்.

பவனமுக்தாசனம் (Pavanamuktasana Benefit)

பவனமுக்தாசனத்தை பயிற்சி செய்வதால் (yoga poses and benefits in tamil), வயிற்று தசைகள் வலுப்படும். மேலும், செரிமான பகுதிகள் மற்றும் குடல் உறுப்புகளை மசாஜ் செய்வதால், வாய்வு பிரச்சனை இல்லாமல் செரிமான பகுதியை மேம்படுத்துகிறது. 

சுகாசனம் (Sukhasana Benefit)

இந்த ஆசனம் முதன் முதலில் ஆசனம் செய்பவர்களுக்கு ஒரு அற்புதமான ஆசனமாகும். உடல் தோரணையை சரிசெய்ய வேண்டும் என்றால் இந்த ஆசனத்தை தினமும் பயிற்சி செய்ய முயற்சி பண்ணுங்க. மேலும் இந்த ஆசனம் செய்வதால், மனதிற்கு ஆறுதலை பெறலாம். மன அழுத்தம், மனக் கவலை குறைவதோடு மட்டுமல்லாமல், மனச் சோர்வையும் குறைக்க உதவுகிறது. அதோடு, மார்பு மற்றும் முதுகெலும்புகளும் நீட்சி அடையும். 

நவுகாசனம்(Naukasana Benefit)

வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க சிறந்த ஆசனம் இதுவாகும். அதோடு வயிற்று தசைகளையும் நீட்டுகிறது. 

ககாசனம் (Kakasana Benefit)

மந்த நிலையை போக்கி சுறுசுறுப்புடனுன் வைக்கவும், மனதை ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கவும், மனம் மற்றும் உடல் சமநிலையை அதிகரிக்கவும் இந்த ஆசனம் மிகச் சிறந்தது. அதுமட்டுமல்லாமல், மணிக்கட்டு, கைகள், முன்கைகளின் தசைகளை வலுப்படுத்துகிறது. இந்த ஆசனத்தை செய்வது கடினம் ஆனால், நிறைய பலன்களை கொடுக்கும். 

சர்வங்காசனாம் (Sarvangasana Benefit)

தைராய்டு பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க இந்த ஆசனத்தை தினமும் பயிற்சி செய்யலாம். அதுமட்டுமல்லாமல், இந்த ஆசனம் உடலில் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி, புத்துயிர் அளிக்கிறது. இவ்வாசனத்தால் எவ்வித அழுத்தமும் இல்லாமல் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை கொடுக்கும். 

தனுராசனம் (Dhanurasana Benefit)

இது ஒட்டுமொத்த உடலையும் நீட்டுகிறது. எடையை குறைக்க உதவும் ஆசனங்களில் மிகவும் பிரபலமானது. அதுமட்டுமல்லாமல், இரத்த ஓட்டம், செரிமானத்தை மேம்படுத்துகிறது. 

வக்ராசனம் (Vakrasana Benefit)

வக்ராசனம் உடலில் நெகிழ்வுதன்மையை அதிகரிக்கிறது. உட்கார்ந்தால் கால் பிடித்துவிட்டது, திரும்பினால் கழுத்து பிடித்துவிட்டது என்று சொல்பவர்களுக்கு சிறந்த ஆசனம். தினமும் செய்துவந்தால் ஒழுகற்ற செரிமானம் சீராகும். 

புஜங்காசனம் (Bhujangasana Benefit)

இந்த ஆசனம் செய்வதால் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் ஆற்றல் உள்ளது. இதை தினமும் செய்து வந்தால் உடல் சோர்வு தன்மை அகன்று, மன அழுத்த பிரச்சனையும் குறைந்துவிடும். உடலை எப்போது சுறுசுறுப்பாக வைத்திருக்கும். 

ஹலாசனம் (Halasana Benefit)

ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே முதுகு தண்டு வளைந்து காணப்படும் அந்த மாதிரியான பிரச்சனை இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தொடந்து செய்து வந்தால், முதுகெலும்பு நீட்சி பெறும். அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் கழுத்து விறைப்பு வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. கழுத்துவலியால் அவதிப்படுபவர்களும் இந்த ஆசனத்தை (types of yoga in tamil) செய்யலாம். 


Pranayama Yoga: தினமும் பிராணாயாமம் செய்துவந்தால் ஆயுளை நீட்டிக்கலாம்...


இந்த அற்புதமான யோகா தினத்தில் (national yoga day 2022) உங்களுக்கு விருப்பமான யோகாசனத்தை தேர்வு செய்து பயிற்சி செய்ய ஆரம்பியுங்கள்.. வாழ்க வளமுடன்!

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்