Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடுபவர்களா நீங்கள்..? அப்ப நீங்க இத கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.!

Gowthami Subramani Updated:
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடுபவர்களா நீங்கள்..? அப்ப நீங்க இத கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.!Representative Image.

பசிக்கு சாப்பிடுவதை விட்டு, ருசிக்கு சாப்பிடுபவர்களே அதிகம். அதிலும், மக்கள் பெரும்பாலும் ஃபாஸ்ட் புட் சாப்பிடுவதை விரும்புவர். குறிப்பாக, வெஜ் ரைஸ், எக் ரைஸ், ஃப்ரெஞ்ச் ப்ரைஸ், பீட்சா போன்ற ஏராளமான ஃபாஸ்ட் புட் வகைகளை விரும்புவோர் பலர். ஆனால், இந்த வகை உணவுப் பொருள்கள் விரைவில் செய்து சாப்பிடப்படும் உணவாக இருந்தாலும், இதனை சாப்பிடுவதால் உடலுக்குப் பல்வேறு கெடுதல்கள் வரும். உடல் நலத்திற்குக் கேடு தரும் இவற்றையே மக்கள் அதிக அளவில் விரும்பி உண்ணுகின்றனர்.

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடுபவர்களா நீங்கள்..? அப்ப நீங்க இத கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.!Representative Image

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்

உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் ஆனது குறைவான கால மற்றும் நீண்ட கால விளைவுகளைக் கொண்டுள்ளதாக அமைகிறது. ஏன் மரணத்தைக் கூட நெருங்கும் காரணியாக இந்த ஃப்ரெஞ்சு ப்ரைஸ் சாப்பிடுவது அமைகிறது. ஃப்ரெஞ்சு பொரியல்களைச் சாப்பிடுவதால், மக்கள் தனது அபாயகரமான சூழலை எட்டுவதாகவே அமைகிறது. வறுத்த எண்ணெய்களில் உருளைக்கிழங்கை போட்டு வேக வைப்பது அதிக ஆபத்தைத் தரக்கூடிய சூழலை ஏற்படுத்தும்.

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடுபவர்களா நீங்கள்..? அப்ப நீங்க இத கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.!Representative Image

ஃப்ரெஞ்ச் பிரைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

இதனைத் தவிர, ஃப்ரெஞ்ச் பிரைஸ் சாப்பிடுவதால் ஏராளமான தீய விளைவுகளைப் பெறுகிறோம். இதில் அதனைப் பற்றி விரிவாகக் காண்போம்.

எடை கூடுதல்

பொதுவாக, எண்ணெய் சார்ந்த உணவுப் பொருள்களை உண்ணும் போது எடை கூடுவது வழக்கமான ஒன்று. ஏனெனில், உணவுகளை எண்ணெய் கொண்ட கொழுப்பில் சேர்த்து வறுக்கும் போது, அதன் கலோரி அளவு அதிகரிக்கக் கூடும். எனவே தான் பொரியல் சம்பந்தமான உணவுப் பொருள்களுக்குக் கூட மிகக் குறைவான கலோரி அளவைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகின்றனர். ஆய்வில் வெளிவந்ததாவது, வறுத்த உணவுகளைச் சாப்பிடுவது உடன் பருமனுக்கு நேரடியாகத் தொடர்புடையதாக அமைகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆரோக்கியமற்ற பாக்டீரியா அதிகமாதல்

பொதுவாகவே, அதிக கொழுப்பு மற்றும் க்ரீஸ் உள்ளிட்டவற்றை உட்கொள்ளும் போது குடல் சேதம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இது சிறிது சிறிதாக குடல் சேதத்தை ஏற்படுத்துவதுடன், ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கிறது. இது உடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாவை குறைக்கவும் செய்கிறது. உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு உருவாவதில் குடல் முக்கிய பங்காற்றுகிறது. எண்ணெய் சார்ந்த உணவுப் பொருள்களில் இந்த ஃப்ரெஞ்ச் பிரைஸூம் அடங்கும். எனவே, இதனை உண்பதில் அதிக கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

வயிறு வலியை ஏற்படுத்துதல்

புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவற்றைக் காட்டிலும், கொழுப்பு உடலின் ஜீரணத் தன்மையைக் குறைக்கிறது. அதிக கலோரிகளைக் கொண்டிருப்பதன் காரணமாக, வயிற்றில் அதிக நேரம் கொழுப்பு தங்கி விடும். இதனால், வயிறு வலி ஏற்பட வாய்ப்புண்டு. ஆய்வில் தெரிவித்துள்ளபடி, வயிற்று வலியால் பாதிக்கப்படும் போது வயிற்றுப்போக்கு, வீக்கம், தசைப்பிடித்தல் மற்றும் குமட்டல் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புண்டு. அளவுக்கு அதிகமாக இந்த ஃப்ரெஞ்ச் பிரைஸை சாப்பிடுவதாலும் இது போன்ற விளைவுகள் ஏற்படக்கூடும்.

இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுதல்

உடலுக்கு அதிக வறுத்த உணவுகளைச் சேர்க்கும் போது மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்பட நேரிடும். இதனால் ஏற்படும் அபாயம் 7%-ற்கும் அதிகம் எனவும் கூறப்படுகிறது. அதன் படி, இந்த வறுத்த உணவுகளை உட்கொள்ளும் போது, அதனால் ஏற்படக்கூடிய ஆபத்து 15%-ஆக இரட்டிப்பாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும், பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூளை செயல்திறன் இழப்பு

அதிக அளவிலான கலோரி கொண்ட கொழுப்புப் பொருள்களை சாப்பிடுவதால், நம் உடலின் எடை கூடும். இதனால் அதிக நேரம் வேறு எந்த வேலையும் செய்ய முடியாத சூழல் ஏற்படும். எனவே, மூளை அதிக நேரம் வேலை செய்ய இயலாத சூழ்நிலையும் ஏற்படலாம்.

இந்த எண்ணெய் சார்ந்த பொருள்களை உட்கொள்வதால், இது போன்ற ஏராளமான பக்கவிளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்