Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உங்களுக்கு “லோ-ப்ர்ஷர்” இருக்கா..? - முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!

Lakshmi Updated:
உங்களுக்கு “லோ-ப்ர்ஷர்” இருக்கா..? - முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!Representative Image.

நமது ஆரோக்கியத்தை அளவிடும் சில முக்கிய விஷயங்களில் ரத்த அழுத்தம் முக்கியமானது. இளம் வயதிலேயே உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை பலருக்கும் இருக்கிறது. இதனால் மன அழுத்தம் மற்றும் சோர்வு அதிகமாக ஏற்படுகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் பாலினம் மற்றும் வயதைப் பொறுத்தது. பொதுவாக, நார்மல் இரத்த அழுத்தத்திற்கு, டயஸ்டாலிக் அழுத்தம் 95 mmHg-க்கு மேல் அதிகரிக்க கூடாது. மேலும் சிஸ்டாலிக் அழுத்தம் 140 mmHg க்கு மேல் அதிகரிக்க கூடாது. இருப்பினும், டயஸ்டாலிக் மற்றும் சிஸ்டாலிக் அழுத்தம் இரண்டும் மிகக் குறைவாக இருந்தால், உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை இருக்கலாம்.

குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதை கீழ்வரும் அறிகுறிகளை வைத்து கண்டுகொள்ளலாம்.

தலைச்சுற்றல்,

படுக்கையிலிருந்து எழும்போது ஏற்படும் கிறுகிறுப்பு,

மங்கலான பார்வை,

சோர்வு,

லேசான தலைவலி,

குமட்டல்,

மயக்கம்

உங்களுக்கு “லோ-ப்ர்ஷர்” இருக்கா..? - முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!Representative Image

காரணங்கள்

குறைந்த இரத்த அழுத்தம் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் இரத்தப்போக்கு அல்லது கர்ப்ப காலங்களில் பெண்கள் குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்படலாம். குறைந்த இரத்த அழுத்தம் இரத்த இழப்பு, நோய்த்தொற்றுகள், இரத்த சோகை அல்லது டிஸ்ரித்மியாவைக் போன்றவற்றை குறிக்கும். குறைந்த ரத்த அழுத்தத்திற்கான ஏதேனும் அறிகுறிகள் உங்களுக்குத் தெரிந்தால் உடனே அதைக்  கண்டறிய மருத்துவரை அணுகுவது நல்லது.

உங்களுக்கு “லோ-ப்ர்ஷர்” இருக்கா..? - முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க!Representative Image

சிகிச்சைகள்

குறைந்த இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையானது அதன் காரணம் என்ன என்பதைப் பொறுத்து சிகிச்சைகள் மாறுபடலாம். தலைச்சுற்றல் மற்றும் மங்கலான பார்வை ஆகியவற்றைத் தடுக்க எப்போதும் படுத்திருந்து அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்தபின் மிக மெதுவாக எழுந்து நிற்க வேண்டும். போதுமான அளவு அவ்வப்போது தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்