Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Weight Loss Tips at Home in Tamil: உங்கள் எடைக்குறைப்பை எளிமையாக மாற்றக்கூடிய 9  பழக்கவழக்கங்கள்?

Editorial Desk Updated:
Weight Loss Tips at Home in Tamil: உங்கள் எடைக்குறைப்பை எளிமையாக மாற்றக்கூடிய 9  பழக்கவழக்கங்கள்?Representative Image.

Weight Loss Tips at Home in Tamil: ஆரோக்கியமான உணவுத் பழக்கத்தை தேர்ந்தெடுத்து அதனை தொடர்ந்து கடைப்பிடிப்பது பெரும்பாலும் சாத்தியமற்றதாகத் தோன்றலாம்.  உண்மையில், ஏறக்குறைய நாம் அனைவரும் தொடர்ந்து அவ்வாறு செய்வதற்கு ஏற்ற உத்வேகம் இல்லாமலே இருக்கின்றோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக,சில ஊக்கப்படுத்தும் செயல்முறைகள் உங்களை இதனை செய்ய தூண்டுகிறது. வாங்க உங்கள் உடல் எடையை குறைக்க சில வழிமுறைகள் (body weight loss tips in tamil) பற்றி இங்கே விவாதிப்போம்.

உங்கள் உடல் எடையை தொடர்ந்து குறைக்க உதவும் சில வழிமுறைகள்:

1. காரணத்தை தேர்ந்தெடுக்கவும்:

முதலில் எதற்காக உங்கள் எடையை குறைக்க விரும்புகிறீர்கள் என்ற காரணத்தை, அதற்கான நோக்கத்தையும் விரிவாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இது அர்ப்பணிப்புடனும், உங்களது இலக்கை முற்றிலுமாக அடைய ஒரு தூண்டுகோலாக இருக்கும். மேலும் உங்களது எடை குறைப்பு இலக்கை அடைவதற்கு முன்னர் உங்கள் கவனம் வேறு ஏதேனும் ஒரு செயலில் ஈடுபட முற்படுமேயானால் இது உங்களது கவனத்தை எடை குறைப்பில் ஈடுபட தூண்டும். மேலும் எடைக்குறைப்பு என்ற சிந்தனையானது மற்றவர்கள் உங்களிடம் கூறி அதனை நீங்கள் செயல்படுத்துவதற்கு விட அது உங்கள் மனதில் இருந்து வந்தால் அதன் பலன் இன்னும் கூடுதலாக இருக்கு என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2. நடைமுறைப்படுத்துங்கள்:

நீங்கள் மேற்கொள்ளும் பல உணவு முறைகள் மற்றும் எடையை இழக்கும் வழிமுறைகள் உங்களுக்கு மிகவும் குறைவான பலனையே சில சமயம் தரும். சில சமயம் நாம் எடுத்துவைக்கும் சாத்தியமில்லாத எடைக்குறைப்பு இலக்கானது, நமக்கு விரக்தியை தரும், ஆனால் சாத்தியமான குறிப்பிட்ட எடை இழப்பு இலக்கானது நம்மால் முடியும் என்ற வெற்றி உணர்வை கொடுக்கும். மேலும் ஒவ்வொரு தனி நபரும் தாங்கள் சுயமாக நிர்ணயித்த எடைக்குறைப்பு ஆசைகளை அடையும் போது, அவர்களின் எடைக்குறைப்பு நேரத்தை வெகுவாக குறைக்க முடியும்.

3. தேவையானவையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்:

பலர் தனிநபர்களாக தங்களது உடல் எடையை குறைக்க முயற்சிகள் எடுத்துவருகின்றனர். மேலும் அவர்கள் மிக உயர்ந்த இலக்குகளை விரைவாக அடைய விரும்புகின்றனர். அதேசமயம் உங்கள் வசதிக்கேற்ப உங்களது இறுதி முடிவில் கவனம் செலுத்தினால் அது உங்கள் எடை குறைப்பு நடவடிக்கையில் சிதைவை ஏற்படுத்தக்கூடும். எனவே இறுதி முடிவுகளில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். உறுதியான இலக்குகளை அடைய SMART வழிமுறைகளை பின்பற்றுங்கள். SMART என்பது குறிப்பிட்ட, அளவிடக்கூடிய, அடையக்கூடிய, யதார்த்தமான மற்றும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டது. SMART வழிமுறைகளை பின்பற்றுவது, உங்கள் இலக்கை அடைய எளிமையான வழிகளை கொடுக்கும்.

4. சரியான உணவு திட்ட முறைகளை பின்பற்ற வேண்டும்:

முதலில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய உணவுத்திட்டத்தை கண்டுபிடிக்க வேண்டும். அடைய முடியாத இலக்கை கைவிடவும், நூற்றுக்கணக்கான பல்வேறு உணவு வகைகள் இருந்தாலும் உடல் இடைக்காய் குறைக்க உதவும் உணவு வகைகளை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் நீங்கள் உடல் எடையை கடைசிவரை சமநிலையில் வைக்க விரும்பினால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் உணவு திட்டதில் உள்ள உணவுகளை கடைசி வரை பின்பற்றிக்கொண்டே இருக்க வேண்டும் அதுவே உங்களது எடை குறைப்பிற்கு முற்றிலும் பலனளிக்கும். குறுகிய காலத்திற்கு மட்டும் பலனளிக்கும் உணவு வகைகளை (easy weight loss tips in tamil) கைவிடவும்.

5. எடைக்குறைப்பு சார்ட்டை தயார் செய்யவும்:

சுய-கண்காணிப்பு எடை குறைப்பு ஊக்கத்திற்கும் மற்றும் வெற்றிக்கும் முக்கியமானதாகும். தங்கள் உட்கொள்ளும் உணவு முறையை சரி செய்யும் நபர்கள் எடையை குறைப்பதற்கும் எடை இழப்பை பராமரிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது என ஆராய்ச்சி முடிவுக்கு தெரிவிக்கின்றன. இருந்தாலும் உங்கள் உணவு பழக்கத்தினை ஒரு சார்ட்டாக எழுதி வைக்க வேண்டும், இதில் நீங்கள் உட்கொள்ளும் சாப்பாடு அவற்றின் அளவு, தின்பண்டங்கள், இனிப்பு வகைகள் ஆகியவை அடங்கும். இந்த முறை உங்களது எடை குறைப்பு எடை அதிகரிப்பு ஆகியவற்றிற்கு நீங்களே பொறுப்பேற்க உதவும். எழுத முடியவில்லை என்றால் இணையம் மற்றும் அதற்கென உள்ள செயலிகளை பயன்படுத்தலாம்.

6. ஒவ்வொரு மைல்கல்லுக்கும் உங்களை நீங்களே வழிநடத்துங்கள்:

உங்கள் உடல் எடையை குறைத்து உங்களது உடலை கச்சிதமான வடிவத்திற்கு கொண்டுவருவது சற்று சிரமமே என்றாலும். உங்கள் நோக்கத்தை நிறைவேற்ற எடுத்துவைக்கும் போது ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்திற்கும் நீங்களே ஒரு குறிப்பிட்ட ஸ்கோரை கொடுங்கள். சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏதேனும் பக்கங்களில் கொடுக்கப்படும் ஆலோசனைகள் உங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும். நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் பெரும் வெற்றிகள் ஒவ்வொன்றையும் நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். இது உங்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு செயலாக கருதுங்கள்.

7. உங்களுக்கு கிடைக்கும் ஆதரவுகளை பொக்கிஷமாக கருதுங்கள்:

பொதுவாக மக்கள் அனைவரும் தாங்கள் ஏதேனும் ஒரு செயலை செய்யும் போது மற்றவர்களிடம் இருந்து வரும் நல்ல கருத்துக்களையும், ஆதரவையும் விரும்புவார்கள். நீங்கள் உடல் எடை குறைப்பு செயல்பாட்டில் இருக்கும்போது உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடம் கூறுங்கள். ஒரு வேலை அவர்கள் உங்களுக்கு உதவலாம் அல்லது உங்களுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் ஆலோசனைகள் வழங்கலாம். மேலும் எடைகுறைப்பிற்கு உங்களுக்கு ஒரு துணியை கண்டுபிடியுங்கள் அது ஒருவருக்கொருவர் ஊக்குவிப்பதாக அமையும்.

8. நேர்மறையாக செயல்படுங்கள்:

மிகுந்த எதிர்பார்ப்புகள் மற்றும் தங்கள் ஆசைகளை அடைவதில் நம்பிக்கை கொண்டவர்கள் கூடுதல் எடையை இழக்கிறார்கள். மனரீதியாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் உங்கள் இலக்கு எடையை அடைவதை கற்பனை செய்து சில நிமிடங்களைச் செலவிடுங்கள், சந்தேகத்திற்கு இடமின்றி உங்கள் எடை இழப்புக் கனவுகளைப் பற்றி சிந்தித்துப் பேசுங்கள், நீங்கள் சாதுர்யமானவர் என்பதை உறுதி செய்து உங்கள் இலக்கை அடையும் படிக்கட்டுகளை நோக்கி வெற்றி நடை போடுங்கள்.

9. சவால்களுக்கு தயாராக இருங்கள்:

ஒவ்வொரு நாளும் மன அழுத்தங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அவற்றை நிர்வகிப்பதற்கான அணுகுமுறைகளைக் கண்டறிவது மற்றும் பொருத்தமான திறன்களை வளர்த்துக்கொள்வது, வாழ்க்கை உங்களைத் தாக்கினாலும் உற்சாகமாக வாழ உதவும். இது சாத்தியமா என உங்கள் மனது யோசிக்கும் போது உங்களது மூளையை மூளைச்சலவை செய்வது அவசியம். பின்னடைவுகளைத் திட்டமிடுவது மற்றும் விரும்பத்தக்க சமாளிக்கும் நடைமுறைகளைக் கொண்டிருப்பது அவசியம். மன அழுத்தத்தைக் கையாள்வதற்கான ஒரு வழியாக நீங்கள் பிடித்த உணவை உண்டால், அதனால் ஏற்படும் விளைவுகளை மாற்றியமைக்க வெவ்வேறு முறைகளைப் பயிற்சி செய்யத் (weight loss tips in tamil at home)  தொடங்குங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்