Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாய் கடித்ததும் என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக் கூடாது..?

Nandhinipriya Ganeshan September 23, 2022 & 13:20 [IST]
நாய் கடித்ததும் என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக் கூடாது..?Representative Image.

நம்மில் பலருக்கும் நாய்கள் மிகவும் பிடித்த ஒரு செல்ல பிராணி. ஆனால், நாய்கள் நம்மிடம் என்னதான் பாசமாக இருந்தாலும் அதுவும் ஒரு விலங்கு என்பதை மறந்துவிடக் கூடாது. அவைகள் நம்மை கடிக்கும் போது அவற்றின் விஷம் நமது உடலில் பரவி பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடியது. வீட்டு நாயோ அல்லது தெரு நாயோ அவற்றின் பல் நம்மீது விழுந்துவிட்டால் உடனே மருத்துவ சிகிச்சை பெற வேண்டியது அவசியம். நாய்கள் வேண்டுமென்றே நம்மை கடிப்பது கிடையாது. வெறிப்பிடித்திருக்கும் போதும், அவற்றை துன்புறுத்தும் போதும் நம்மை தாக்குகின்றன. 

ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் சுமார் 60 ஆயிரம் பேர் வெறி நாய்க்கடியால் இறந்து போகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏன் சமீபத்தில் கூட இந்த மாதிரி எத்தனையோ தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. நாமும் பார்த்தும் கேட்டும் இருப்போம். நாய் கடிக்கு மருந்து இருக்கிறது என்றாலும், தீவிரமாக ஒரு வெறி நாய் கடித்து குதறிவிட்டால் ஒரு மனிதன் பிழைப்பது என்பது கடினம் தான். இருப்பினும் நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் அல்லவா? வாங்க நாய்க்கடித்த உடனே செய்ய வேண்டிய சில முதல் உதவி சிகிச்சைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம். 

நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியவை:

தெரு நாயோ வெறி நாயோ வீட்டில் வளர்க்கும் நாயோ கடித்தவுடன் கடித்த இடத்தை விரல்களால் வைத்து மெல்ல அழுத்துங்கள். இப்படி அழுத்தும்போது பாக்டீரியாக்கள் உள்ள இரத்தம் வெளியே வந்துவிடும். 

அதன்பின் நாய் கடித்த இடத்தை ஓடும் தண்ணீரில் 10 முறை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். நன்கு ரத்தம் வெளியேறும்வரை கழுவ வேண்டும். பின்பு சுத்தமான துணியை கொண்டு துடைத்து எடுத்துவிடுங்கள். 

டெட்டால் இருந்தால் ஒரு சுத்தமான துணியில் தொட்டு காயமுள்ள இடத்தை துடைத்துவிட்டு, ஆண்டி-பயாடிக் க்ரீம் தடவிக்கொள்ளுங்கள். உடனே மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.

பொதுவாக விலங்குகளின் ரேபீஸ் கிருமி அதன் எச்சில் மூலமாகத் தான் பரவும். உடலில் தோல் கிழியாத பட்சத்தில் எந்த காயத்திலும் அந்த கிருமி பரவாது. 

அதுவே தோல் கிழிந்து இருந்தால் தடுப்பூசி கட்டாயம். முக்கியமாக முகத்தில் கடித்துவிட்டால் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனே தடுப்பூசி போட வேண்டியது அவசியம். 

செய்யக் கூடாதவை:

நாய் கடித்தவுடன் முதலில் பயப்படாதீர்கள். அதற்கான முதல் உதவி சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள். நானும் நாயாக மாறிடுவேனா? நான் இறந்துவிடுவேனா? என்று கண்டதை சிந்திப்பதையும் தவிர்க்க வேண்டும்.

நாய் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, பச்சிலைச்சாறு, சந்தனம், சாம்பல் போன்றவற்றைத் தடவக்கூடாது. அப்படி தடவினால் கிருகிகள் உடலை விட்டு வெளியேருவடு தடைபடும்.

நாய் கடித்த இடத்தில் ஒருபோதும் கட்டுப் போட்டு மூடக்கூடாது. அது திறந்த காயமாக இருந்தாலும் சரி, ஆழமான காயமாக இருந்தாலும் சரி.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்