Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Alzheimer's Disease: அல்சைமர் ஆபத்தானதா? இந்த நோயை எவ்வாறு சரிசெய்யலாம்?

Nandhinipriya Ganeshan September 21, 2022 & 10:46 [IST]
Alzheimer's Disease: அல்சைமர் ஆபத்தானதா? இந்த நோயை எவ்வாறு சரிசெய்யலாம்?Representative Image.

நம்மில் எத்தனை பேருக்கு அல்சைமர் என்ற மூளைதேய்வு நோயை பற்றி தெரியும்? இது ஒரு வகையான ஞாபக மறதி நோய். பொதுவாக 60 வயதை கடந்தால் ஞாபக மறதி வரும் என்பார்கள், ஆனால் தற்போது வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதித்தி வருகிறது. அதை வராமல் தடுக்க என்ன செய்யலாம்? மற்ற வியாதிகளை போலவே அல்சைமர் நோயும் ஒரு உயிர் கொல்லி தான். இது ஒருவருக்கு வந்தால் நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து விடுவார்கள். 

பெரும்பாலும் வயது முதிர்வின் காரணத்தால் அல்சைமர் வருவது வழக்கம். ஆனால், தற்போது இளம் வயதினரிடையே வருகிறது. இதை சிகிச்சை மூலம் குணப்படுத்த இயலாது. ஆரம்பத்திலேயே நோயின் தன்மையை அறிந்து அதற்கேற்ற சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் சரிசெய்யலாம். ஆனால், நோய் முற்றிவிட்டால் தீர்க்க எந்த விதமான வழியும் இல்லை. இந்த நோய் மரபணுக்கள், வயது, பரம்பரை நோய் மற்றும் உணவு பழக்கம் போன்றவற்றால் ஏற்படுகிறது. 

அறிகுறிகள்:

முதல் அறிகுறி ஞாபக மறதி. உதாரணமாக பெயரை மறப்பது, பொருளை தொலைப்பது, வார்த்தைகளை கண்டுபிடிக்க திணறுவது, புதுசா கற்றுக்கொள்வதில் பிரச்சனை, அடிக்கடி பல விஷயங்களை, ஏன் சில சமயங்களில் உறவினர்களையே மறந்துவிடுவார்கள்.

இந்த நோய் வந்துவிட்டால், இயல்பற்ற நிலையில் இருப்பார்கள். உதாரணமாக கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தினால் வாகனத்தில் பயணிப்பது, சமையல், வீட்டு வேலை போன்ற வேலைகளை செய்ய கஷ்டப்படுவார்கள். இந்த நோய் முற்றிவிட்டால் சாப்பிடுவதற்கு,

குளிப்பதற்கு, கழிப்பறை விஷயங்களை கூட துணைய்யில்லாமல் செய்ய முடியாமல் போய்விடும்.

எழுத்து, எண்களை அடையாளம் காண்பதில் பிரச்சனை ஏற்படுவது. ஏன், தங்களின் சொந்த வரவு செலவு கணக்குகளை பராமரிப்பதில் கூட தடுமாற்றம் ஏற்படும். மேலும், காரணமே இல்லாமல் கோபப்படுவது, முரட்டுத்தனமாக நடந்து கொள்வது போன்ற குண மாறுதல்கள்.  

இந்த வியாதியினால் தற்போதைய நேரம், தேதி மற்றும் நாளை மறந்து விடுவார்கள். ஏன், ஆட்களையும் இடங்களையும் கூட அடையாளம் காண முடியாமல் போய் விடுவார்கள்.

காரணமே இல்லாமல் சந்தேகப்படுவது, எளிதில் உணர்ச்சிவசப்படுவது போன்ற மாற்றங்கள் இருக்கும். இவர்கள் எப்போது தங்களை தனிமைப்படுத்தி கொண்டு அமைதியுடனேயே இருப்பார்கள்.

வயதாகிவிடுமோ என்று பயப்படுறீங்களா? இதுவும் ஒரு நோயே!

இல்லாத விலங்குகள், மனிதர்களை இருப்பதாகவும், அவர்களுடைய குரல் கேட்பதாகவும் உணர்வார்கள். உதாரணமாக, இறந்துபோன தந்தை அல்லது தாயை காண்பதும், அவர் இன்னும் இறக்கவில்லை என்று நம்புவதும் இந்த நோயின் உச்சக்கட்டம் என்று சொல்லலாம். 

அதீத பயம், பிடிவாதம், பொறாமை, சுயநலம், சந்தேகம், தனிமை, உணர்ச்சிவசப்படுதல் மற்றும் மற்றவர்களிடம் பேச பிடிக்காமல் போவது போன்ற மாற்றங்களை சந்திக்கலாம். 

அல்சைமரை எவ்வாறு தடுப்பது?

அடிக்கடி மறதி ஏற்படுகிறது என்றால், அதை ஆரம்பத்திலேயே சில பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதன் மூலம் உச்சக்கட்டத்திற்கு போகாமல் தடுக்கலாம். இப்போது அதற்கான வழிகளை பற்றி பார்க்கலாம்.

மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். புத்தகம் படிப்பது, இணையத்தில் இருந்து புது புது விஷயங்களை கற்றுக்கொள்வது போன்றவற்றை தொடர்ந்து செய்ய வேண்டும். 

உடற்பயிற்சி, தியானம், யோகா போன்றவற்றின் மூலமும் அல்சைமரை தடுக்கலாம். தினமும் 2-3 கப் காபி குடிப்பதன் மூலம் அல்சைமர் நோயில் இருந்து 65% சதவீதம் பாதுகாப்பு கிடைக்கும் என்று ஐரோப்பாவில் நடந்த ஒரு ஆய்வு கூறுகிறது. 

காபி பிடிக்கவில்லை என்றால், ஆப்பிள் ஜூஸ் குடிங்க. ஆப்பிளில் மூளையில் ஞாபக சக்தியை அதிகரிக்ககூடிய இரசாயனமான அசிடில்கோலினின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. 

தக்காளி காய்ச்சலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?

தலையில் எந்த விதமான காயங்கள், அடி விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்த நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, தலையை பத்திரமாக காத்துக்கொள்ளுங்கள்.

வைட்டமின் டி குறைப்பாட்டால் கூட இந்த நோய் வரும். எனவே, வைட்டமின் டி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளுங்கள். ஆக, இந்த நோயில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் மூளைக்கு எப்போதும் வேலைக்கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் மறந்துவிட்டால், மூளையும் வேலை செய்ய மறந்துவிடும், அதன்பிறகு அல்சைமர் தான். அதன் விளைவு உயிரை பறித்துவிடும்.

ஞாபக மறதியை அதிகரிக்கும் உணவுகள்:

சோயா

ட்யூனா மீன்

ஆல்கஹால்

ஆரஞ்சு ஜூஸ்

வெள்ளை அரிசி

ஞாபக மறதியை எதிர்த்து போராடும் உணவுகள்:

வால்நட்ஸ், வேர்க்கடலை, முந்திரி மற்றும் பாதாம் போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் ஏராளமாக இருக்கின்றன. வாரத்திற்கு 5 முறை இந்த நட்ஸ்களை உணவில் சேர்த்து வந்தால், மூளை ஆரோக்கியம் மேம்படுவதோடு, இதய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

சால்மன், டுனா, ஹெர்ரிங்ஸ் மற்றும் மத்தி போன்ற மீன்களை வாரத்திற்கு ஒரு முறை சேர்த்துக்கொள்ளலாம். 

பெண்களே உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தா அலட்சியம் காட்ட வேண்டாம்...

பசலைக்கீரை, கேல், கொலார்டு, ப்ராக்கோலி போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் மூளையின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வகை காய்கறிகளை வாரத்திற்கு 6 முறை உணவில் தவறாமல் சேர்த்து வாருங்கள்.

வாரத்திற்கு 2-3 முறை உணவில் பீன்ஸை சேர்த்து கொள்வதும் நல்லது. இதில் நார்ச்சத்து, புரோட்டீன் அதிகம் உள்ளதால் புத்தி கூர்மையாகும்.

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பல்வேறு வகையான பெர்ரி பழங்களை வாரத்தில் இரண்டு முறையாவது சாப்பிட முயற்சி செய்யுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்