Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது.. கடல் மீனா? ஆற்று மீனா?

Nandhinipriya Ganeshan Updated:
உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது.. கடல் மீனா? ஆற்று மீனா?Representative Image.

நாம் சாப்பிடும் அசைவ உணவுகளில் ஆரோக்கியமானது எது என்றால் அது மீன் தான். மீனின் சுவைக்கு நம் நாக்கு என்றுமே அடிமைதான். சிலருக்கு மட்டுமே இதன் வாசனை பிடிப்பதில்லை. அதனால், மீனை வெறுத்து ஒதுக்குவார்கள். ஆனால், மீன்கள் மற்ற உணவுகளை காட்டிலும் நாம் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே ஜீரணமாகி இரத்தத்தில் கலந்து உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதில் சிறந்தவை. மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், மற்ற அசைவ உணவுகளை விட மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. எனவே, மீன் சாப்பிட்டால் வெயிட் போட்டுவிடுவோம் என்ற கவலையே வேண்டாம்.

இந்த மீனிலும் ஆற்று மீன், கடல் மீன், ஏரி மீன், குளத்து மீன் என வெவ்வேறு நீர் நிலைகளில் வாழக்கூடிய மீன்கள் இருக்கின்றன. இருப்பினும், கடல் மீனில் அதிகம் பாதரசம் இருப்பதால் அதை தவிர்க்க சொல்வார்கள். அந்தவகையில், கடல் மீன் சாப்பிடுவது நல்லதா? ஆற்று மீன் சாப்பிடுவது நல்லதா? இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது.. கடல் மீனா? ஆற்று மீனா?Representative Image

ஒமேகா-3 கொழுப்பு அமிலம்:

மீன்களில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் தான் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது. மேலும், இந்த அமிலம் உடலில் ரத்தம் உறையாமல் பார்த்துக் கொள்கிறது. மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த ஊட்டச்சத்து மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே, மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி மீன் சாப்பிடுவதை பழக்கிக்கொள்ள வேண்டும். இந்த அமிலத்திலிருந்துதான் மீன் எண்ணெய், மீன் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. 

உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது.. கடல் மீனா? ஆற்று மீனா?Representative Image

ஆற்று மீன்கள்:

பொதுவாக, ஆறு, ஏரி, குளத்தில் இருக்கும் மீன்கள் அவற்றில் உள்ள புழு, பூச்சிகளை உணவாக சாப்பிட்டு வளருகின்றன. அதேபோல், இந்த ஆற்று மீன்களில் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இருப்பது கிடையாது. எனவே, இவற்றை சாப்பிட்டாலும் உடலுக்கு எந்த சத்தும் கிடைக்காது. சுவைக்காக வேண்டுமானால் சாப்பிட்டுக் கொள்ளலாம். 

உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது.. கடல் மீனா? ஆற்று மீனா?Representative Image

கடல் மீன்கள்:

ஆனால், கடல் மீன்கள் கடலில் வளரும் கடல்பாசிகளை உட்கொண்டு வளர்வதால் அவற்றில் ஒமேகா-3 அமிலம் அதிகமாகவே இருக்கிறது. ஏனென்றால், கடல்பாசிகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும், புரத சத்தும் ஏராளம். இவற்றை சாப்பிட்டு வளரும் கடல் மீன்களிலும் ஒமேகா-3 அதிகளவில் உள்ளது. 

அதேபோல், உப்பு நீரில் வளருவதால், கடல் மீன்களில் சோடியமும், கால்சியமும் அதிகமாக இருக்கிறது. ஆனாலும், கடல் மீன்களில் பெரிய மீன்களைவிட சிறிய மீன்கல் தான் சாப்பிடவும் ஏற்றது. ஏனென்றால், பெரிய மீன்களில் பாதரசம் என்ற உயிர்கொல்லி மூலக்கூறு அதிகம் இருக்கும். எனவே, பெரிய கடல் மீன்களை தவிர்ப்பது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்