Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to : சாப்பிட தூண்டும் சுவையான சாக்லேட் கேக் வீட்டிலே செய்வது எப்படி?

Editorial Desk Updated:
How to : சாப்பிட தூண்டும் சுவையான சாக்லேட் கேக்  வீட்டிலே செய்வது எப்படி?Representative Image.

சாக்லேட் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. அதுவும் சாக்லேட் கேக் என்றால் சொல்லவா வேண்டும். பேக்கரிக்கு போய் கேக் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிய முறையில் சாக்லேட் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்   

How to : சாப்பிட தூண்டும் சுவையான சாக்லேட் கேக்  வீட்டிலே செய்வது எப்படி?Representative Image

தேவையான பொருட்கள்

மைதா - 2 கப் 

சர்க்கரை - 2 கப் 

முட்டைகள் - 8

வெண்ணிலா பவுடர் - 2 ஸ்பூன் 

பேக்கிங் சோடா - 2 ஸ்பூன்

வெண்ணெய் - 450 கிராம் 

சாக்லேட் துண்டுகள் - 400 கிராம்

How to : சாப்பிட தூண்டும் சுவையான சாக்லேட் கேக்  வீட்டிலே செய்வது எப்படி?Representative Image

செய்முறை

கேக் செய்வதற்கு முன் ஒரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரையையும் , தேவையான அளவு வெண்ணெயையும் எடுத்து கொண்டு கிரீமாக மாறும் வரை நன்றாக கலக்க வேண்டும் . 

பிறகு கொதிக்கின்ற நீரில் 400 கிராம் சாக்லேட் துண்டுகளை போட்டு கூழ் போல் ஆக்கி கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் உடைத்த முட்டையை ஊற்றி, கொஞ்சம் உப்பு சேர்த்து நுரை வரும் வரை நன்றாக கலக்கி, பின் தயார் செய்த கிரீமை சேர்த்து கொள்ள வேண்டும். 

மேலும் வெண்ணிலா பவுடர் - 2 ஸ்பூன், பேக்கிங் சோடா - 2 ஸ்பூன் சேர்த்து, முன்னால் செய்து வைத்த சாக்லேட் கூழ் மற்றும் கிரீம் உடன் மைதாவை கட்டியாக ஆகாமல் இருக்கும் வகையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்க வேண்டும்.

பின் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மிதமான முறையில் சூடேற்ற வேண்டும். இப்பொழுது நான்ஸ்டிக் கடாயில் வெண்ணெயை ஊற்றி தயார் செய்து வைத்த கேக் கலவையை கொட்ட வேண்டும். இந்த நான்ஸ்டிக் கடாயை, தோசை கல் மீது வைத்து மூடி வைக்க வேண்டும். பின்பு சுமார் 30 - 40 நிமிடம் வரை வேக வைக்க வேண்டும். இப்போது சுவையான சாக்லேட் கேக் ரெடி.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்