Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Breast Milk vs Formula Milk Nutrition: தாய்ப்பால் VS பசும் பால்.. பச்சிளம் குழந்தைக்கு ஊட்டச்சத்தை தருவது எது?

Nandhinipriya Ganeshan July 10, 2022 & 17:15 [IST]
Breast Milk vs Formula Milk Nutrition: தாய்ப்பால் VS பசும் பால்.. பச்சிளம் குழந்தைக்கு ஊட்டச்சத்தை தருவது எது?Representative Image.

Which is better breastfeeding or bottle feeding: ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் என்பது எவ்வளவு அவசியமானது என்று நம் அனைவருக்குமே தெரியும். இந்த தாய்ப்பால் உணவாக மட்டுமல்ல; குழந்தைக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இருப்பினும், சில பெற்றோர்கள் புட்டி பால் எனப்படும் பசும் பால் அல்லது பால் பவுடர் முறை குழந்தைக்கு அதிக ஊட்டச்சத்துக்களை கொடுப்பதாக நினைக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், சில தாய்மார்கள் தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும் என்பதால் தாய்ப்பால் கொடுக்காமல், அல்லது குறைந்த காலத்திலேயே தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி விடுகின்றனர். சிலர் அழகு பற்றி கண்டுக்கொள்வதில்லை. ஆனால், தாய்ப்பால் கொடுக்க சலுப்பு, தூக்கத்திலிருந்து எழுந்து தாய்ப்பால் கொடுக்க சோம்பேறித்தனம் போன்றவற்றால் குழந்தைக்கு பசும்பால் கொடுப்பார்கள். இப்படிபட்டவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்க வேண்டும். தாய்ப்பாலுக்கும் புட்டிப்பாலுக்கும் இடையே உள்ள சத்துக்களின் வித்தியாசத்தை பற்றி மருத்துவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பார்க்கலாம்.

தாய்ப்பால்:

❖ தாய்ப்பால் பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் இயற்கையான நோய் தடுப்பு மருந்து.

❖ எவ்வித கலப்படமும் இல்லாத இயற்கை உணவு தாய்ப்பால்.

❖ தாய்ப்பால் அருந்துவதால், குழந்தைக்கு ஆரோக்கியமான செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது.

❖ தாய்ப்பாலில் சோடியம் குறைவாக இருப்பதால், குழந்தையின் சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது.

❖ குழந்தைக்கு சருமநோய், காதில் சீழ் வடிதல், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை போன்ற நோய்களை தடுக்கும் சக்தி படைத்தவை தாய்ப்பால்.

❖ இரவு பகல் இல்லாமல் எந்த நேரத்திலும் உடனடியாகக் கிடைக்கக் கூடியது.

❖ தாய்ப்பாலின் சுவை குழந்தைகளால் உடனடியாக ஏற்றுக்கொள்ளக்கூடியவை.

❖ தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைகளுக்கு மட்டுமின்றி தாய்மார்களுக்கும் எராளமான நன்மை உண்டு.

❖ தாய்மார்களுக்கு மகப்பேறுக்கு பிறகான மனச்சோர்வு அபாயத்தை குறைக்கிறது.

புட்டிப்பால்:

❖ தாய் இல்லாத போது, இந்த முறையில் குழந்தைக்கு உணவு அளிக்கலாம்.

❖ ஆனால், பால் பவுடர் மற்றும் பசும் பால் இரண்டும் செயற்கை உணவுகளே. தாய்ப்பால் கொடுக்கும் பாதுகாப்பும், ஆரோக்கியமும், தரமும் இவைகளால் தர இயலாது.

❖ ஃபார்முலா உணவு வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

❖ குழந்தை பசிக்கு அழும்போது பாலை ரெடி பண்ணி கொடுப்பதற்குள் அவர்களின் பசியும் அழுகையும் அதிகமாகி விடும்.

❖ பால் பவுடர் டப்பாவின் காலாவதி தேதியை சரிபார்க்காமல் கொடுப்பதால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகளால் குழந்தை அவதிப்படலாம்.

❖ பால் பவுடர் அல்லது பசும் பால் மூலம் குழந்தைக்கும் புட்டிப்பால் கொடுப்பது போதுமான அளவு ஆரோக்கியத்தை வழங்காது என்றாலும், தாயிடம் போதுமான அளவு பால் சுரக்காத சந்தர்ப்பங்களில் இது உதவியாக இருக்கும்.

❖ வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இது மற்றொரு சிறந்த வழியாக அமைகிறது.

Tags: 

Breastfeeding vs formula feeding advantages disadvantages | Breastfeeding vs formula feeding | Which is better breastfeeding or bottle feeding


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்