Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Who is Eligible for Organ Donation: யாரெல்லாம் உடல் உறுப்பு தானம் செய்யலாம்? 

Nandhinipriya Ganeshan August 13, 2022 & 09:40 [IST]
Who is Eligible for Organ Donation: யாரெல்லாம் உடல் உறுப்பு தானம் செய்யலாம்? Representative Image.

Who is Eligible for Organ Donation: தானத்தில் சிறந்தது அன்ன தானம் என்ற நிலை மாறி, தற்போது இரத்த தானம், உடல் உறுப்பு தானம் போன்றவையே மிகவும் உயரிய தானம் என்ற நிலையை எட்டியுள்ளது. இந்த காலத்திலும் பலர் இரத்த தானம் செய்வதற்கே யோசித்துக் கொண்டிருக்கிறார், இந்த நிலையில் உடலில் ஒரு உறுப்பை கொடுக்க எப்படி சம்பதிப்பார்கள். இதெற்கெல்லாம் காரணம் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே. அந்த வகையில், உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி "உடல் உறுப்பு தான தினம்" World Organ Donation Day 2022 கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

உங்களுக்கு தெரியுமா? ஒவ்வொரு வருடமும் உறுப்பு கிடைக்காததால் கிட்டதட்ட ஐந்து லட்சம் பேர் இறக்கிறார்கள். நாம் இறந்த பிறகு நம்முடைய உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் மண்ணிற்கு இறையாவதை விட, இன்னொரு உயிர் வாழ உதவியாக இருக்கட்டுமே. அந்தவகையில், உடல் உறுப்பு தானம் பற்றிய முக்கியத்துவத்தை ஒவ்வொரு மக்களும் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

ஜாதி, மத, பேதமின்றி உறுப்பு தானம் செய்யலாம். ஆனால், தானம் செய்வதற்கு முன்பு உடலில் நோய் ஏதேனும் உள்ளதா என்பதையும் அறிந்துக் கொள்ள வேண்டும். ஹெபடைடீஸ் பி / சி வைரஸ் தாக்குதல், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள், கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய் பாதிப்படைந்தவர்கள், டி.பி. நோய் பாதிப்பு உள்ளவர்கள் உறுப்பு தானம் செய்ய முடியாது. உடல் உறுப்பு தானம் செய்வதற்கு வயது வரம்பு ஏதுவும் கிடையாது. உடல் உறுப்பு தானத்திலேயெ இரண்டு விதம் உண்டு. உயிரோடு இருக்கும் போது மற்றும் இறந்த பிறகு.  

இறந்த பிறகு தானம் செய்வதிலும் இரண்டு வகை உண்டு. மூளைச் சாவு மற்றும் இயற்கை மரணம். குடும்பத்தில் உள்ளவர்கள் இயற்கை மரணம் நேர்ந்ததும், அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனையை அணுகி உறுப்புகளை தானம் செய்யலாம். இயற்கையான மரணத்தின் போது கருவிழி, தோல், தசை நாண்கள் மற்றும் எலும்புகள் ஆகிய சில உறுப்புகள் மட்டுமே தானம் செய்ய முடியும். 

உயிரோடு இருந்தாலும் மூளை முற்றிலும் செயல்படாத நிலையை மூளைச் சாவு எனப்படுகிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் மூளைச்சாவு அடைந்துவிட்டால், மீண்டுவரமுடியாத நிலையில் இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு நுரையீரல், தசை நாண்கள், எலும்புகள், கருவிழி என எல்லா உறுப்புகளையும் தானமாக கொடுக்க முடியும். 

உயிரோடு இருக்கும் பொழுதே தானம் தரக்கூடிய ஒரே உறுப்பு தானம் சிறுநீரக தானம். ஒருவருக்கு ஒரு சிறுநீரகமே போதும் என்பதால் இரண்டு சிறுநீரகம் கொண்ட ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஒரு சிறுநீரகத்தை உங்க குடும்பத்தில் ஒருவருக்கு தானமாக கொடுக்கலாம். தற்போது சிறுநீரக தானமாக கொடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்