Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இவங்கெல்லாம் மாம்பழத்த சாப்பிடவே கூடாதாம்.. | Mango Side Effects in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இவங்கெல்லாம் மாம்பழத்த சாப்பிடவே கூடாதாம்.. | Mango Side Effects in TamilRepresentative Image.

இந்த வெயில் காலம் வந்துவிட்டாலே இரண்டு விஷயம் தான் ஒன்று சுட்டெரிக்கும் சூரியன், மற்றொன்று நாக்கில் எச்சில் வரவைக்கும் மாம்பழம். பொதுவாக, கோடைக்காலத்தை 'மாம்பழ சீசன்' என்று தான் சொல்வார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்றான இந்த மாம்பழத்தில் இரும்புச்சத்து, காப்பர், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், மாம்பழத்தை சில பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. ஏனென்றால், மாம்பழம் சில உடல் உபாதைகளை உண்டாக்கவல்லது. அதுபற்றி பார்க்கலாம். 

யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடக் கூடாது:

➥ மாம்பழம் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கூடியது. எனவே நீரிழிவு நோயாளிகள் இதை தொடவே கூடாது.

➥ அதேபோல், மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். அதனால் டயட் உணவிற்கு ஏற்றதல்ல.

➥ வயிறு கோளாறு உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிட்டால் பேதி உள்ளிட்ட பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது.

➥ தொண்டை புண், தொண்டையில் தொற்றும் உள்ளவர்கள் மாம்பழத்தை தவிர்க்க வேண்டும்.

➥ மாம்பழம் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டது. அதிகமாக சாப்பிடும்போது வாய், உதட்டில் புண், வெடிப்பு ஏற்படலாம்.

➥ வயதானவர்கள் அதிகம் மாம்பழம் சாப்பிட்டால் மூட்டுவலி, கீழ்வாத பிரச்சினைகள் ஏற்படலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்