Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடர்த்தியா முடி வளர, தினமும் இந்த யோகாவை செய்யுங்க..! | Yoga Asanas For Hair Growth

Gowthami Subramani Updated:
அடர்த்தியா முடி வளர, தினமும் இந்த யோகாவை செய்யுங்க..! | Yoga Asanas For Hair GrowthRepresentative Image.

முழுமையான ஆரோக்கியத்திற்கு யோகா ஆசனங்கள் முதன்மை பங்கு வகிக்கின்றன. நம் உடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் யோகா ஆசனங்கள் பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. உடலின் வெளிப்புறம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாமல், உடல் உட்புறம் சார்ந்தவற்றிற்கும் யோகா ஆசனங்கள் முழுமையான ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அந்த வகையில் முடி வளர்தல், முகப் பொலிவு உட்பட பல்வேறு செயல்களுக்கு யோகா ஆசனங்கள் முதன்மை பங்காற்றுகின்றன.

அடர்த்தியா முடி வளர, தினமும் இந்த யோகாவை செய்யுங்க..! | Yoga Asanas For Hair GrowthRepresentative Image

முடி வளர்தல்

முடி உதிர்தல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முடி உதிர்தலைக் கட்டுப்படுத்துவதற்கு செயற்கை முறையில் வேதிப் பொருள்கள் கலந்த ஷாம்புகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இதனால் ஏராளமான பக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இவற்றைத் தவிர்க்க, இன்னும் சிலர் சீயக்காய் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவர். அதே சமயம் முடி உதிர்தலைத் தவிர்த்து, முடி வளர்ச்சிக்கு யோகாசனங்கள் உதவுகின்றன. அவற்றைப் பற்றி இதில் காணலாம்.

அடர்த்தியா முடி வளர, தினமும் இந்த யோகாவை செய்யுங்க..! | Yoga Asanas For Hair GrowthRepresentative Image

பாலாசனம்

இந்த ஆசனத்தை குழந்தைகள் கால்களை மடக்கிக் கொண்டு குப்புறப்படுத்துக் கொண்டிருப்பது போல் இருக்கும் இருக்கும் காட்சியே பாலாசனம் ஆகும். இவ்வாறு குப்புறப்படுத்திருக்கும் போது முதுகு, தோள், கழுத்து போன்றவை வலுவுடையும். இவ்வாறு செய்யும் போது மன அழுத்தம் குறையும். இதனால், இரத்த ஓட்டம் சீராகப் பரவுகிறது.

பாலாசனம் செய்யும் முறை

முதலில் வஜ்ராசனம் செய்வது போல, அமர்ந்து, மூச்சை நன்கு உள் இழுக்க வேண்டும். பிறகு பக்கவாட்டில் கைகளை உயர்த்தி, அதன் பின் தலைக்கு மேலே கைகளைக் கொண்டு செல்லலாம். இவ்வாறு கைகளை உயர்த்திய பின் மூச்சை வெளியிட்டு முன்புறமாகக் குனிந்து நெற்றி தரையில் படும்படியாக வைத்துச் செய்ய வேண்டும்.

அடர்த்தியா முடி வளர, தினமும் இந்த யோகாவை செய்யுங்க..! | Yoga Asanas For Hair GrowthRepresentative Image

உத்தாசனம்

உத்தாசனம் ஆனது தலைமுடி வளர்ச்சிக்கு மட்டுமல்ல உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் நிறைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.

உத்தாசனம் செய்யும் முறை

இந்த ஆசனத்தில் இரண்டு கால்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு நேராக நிமிர்ந்து நிற்கலாம். இரண்டு கைகளையும் காதுக்கு நேராக ஒட்டி, மேல்நோக்கி நேராக உயர்த்திக் கொள்ளலாம்.

பிறகு, மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியே விட்டபடி, இடுப்பை முன்நோக்கி வளைத்துக் குனிய வேண்டும். இவ்வாறு கால்களை வளைக்கக் கூடாது.

அடர்த்தியா முடி வளர, தினமும் இந்த யோகாவை செய்யுங்க..! | Yoga Asanas For Hair GrowthRepresentative Image

சிரசாசனம்

ஹெட் ஸ்டேன்ட் எனப்படக்கூடிய இந்த ஆசனம், ஆசனங்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. சிரசானம் ஆனது புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படக்கூடிய ஆசனம் ஆகும். இந்த ஆசனத்தின் மூலம், மூளைக்கு செல்லக் கூடிய இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்ய உதவுகிறது. மேலும், இது நரம்பு மண்டலத்தைச் சீராக செயல்பட உதவுகிறது.

இந்த ஆசனம் செய்வதால், மன அழுத்தம் சீராக இருப்பதுடன், தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கிறது. இளநரை பிரச்சனையைத் தடுக்கவும் இந்த சிரசாசனம் உதவுகிறது.

சிரசாசனம் செய்யும் முறை

முதலில் பாலாசனம் நிலைக்கு வர வேண்டும். பிறகு, உள்ளங்கைகளை தோள்பட்டைக்கு கீழாக நேராக இருக்கும் படி வைத்துக் கொண்டு முழங்காலை இடுப்புக்குக் கீழ் நேராக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, கைகளை மடக்கி, முன்னோக்கி இருக்குமாறு தரையில் வைக்க வேண்டும். இதன் பின், உள்ளங்கை உங்களை நோக்கிய படி இருக்க வேண்டும்.

இதில், மூச்சை நன்கு உள்ளிழுத்தபடி மெதுவாக கால் முட்டியை உயர்த்த வேண்டும்.

அதன் பிறகு, மெதுவாக இடுப்பைக் கீழிறக்கி வைத்து, மீண்டும் பாலாசனத்திற்கு வந்து ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்