Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆடி மாசத்துல ஏன் புதுசா கல்யாணமான தம்பதிகள் ஒன்று சேர கூடாது…?

Nandhinipriya Ganeshan July 19, 2022 & 20:40 [IST]
ஆடி மாசத்துல ஏன் புதுசா கல்யாணமான தம்பதிகள் ஒன்று சேர கூடாது…?Representative Image.

ஆடிமாதம் பிறந்து விட்டாலே அனைத்தையும் தள்ளுபடியில் வாங்கிவிடலாம் என்று ஒரு கூட்டம் காத்திருக்கும், விவசாயிகள் வேலைகளை துரிதப்படுத்த கிளம்பிவிடுவார்கள், பெண்கள் ஆடி பெருக்கை வரவேற்க தயாராகி வருவார்கள், அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஆன்மீக அன்பர்கள் கூழ் ஊற்றி மனம் குளிர ஏற்பாடு செய்வார்கள். இப்படி எல்லோரும் ஆடியின் வருகையை ஆரவாரமாக கொண்டாடிக்கொண்டு இருக்கும் வேளையில், அடடா… ஆடி மாசம் வந்துவிட்டதா? என்று வருத்தப்படுபவர்கள் புதுமணத் தம்பதிகள்.

ஆடிமாதம் வந்துவிட்டாலே புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும். வீட்டில் உள்ள பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து புதுமணத் தம்பதிகளை பிரித்து பெண்ணை அம்மாவீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். மாதம் முடியும் வரை தனி படுக்கை தான். காலம்காலமாக பின்பற்றி வரும் இந்த பழக்கத்திற்கு அறிவியல் ரீதியாகவும் நன்மை தரக் கூடியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்று நமக்கு தெரியும். இந்த மாதத்தில் பெரும்பாலான திருவிழாக்கள் அம்மனுக்கு நடத்தப்படுகின்றன. அந்தமாதிரியான சமயத்தில் வீட்டில் உள்ள சின்னஞ்சிறுசுகள் இணைந்திருப்பது அவ்வளவாக நல்லது கிடையாது என்று நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கை. இதனால், தான் ஆடிமாதம் பிறப்பதற்கு முன்னறே புதிதாய் திருமணமான தம்பதியர்களுக்கு சீர் கொடுத்து பெண்ணின் பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவார்கள்.

இதற்கு காரணம் ஆடியில் கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்பார்கள். சித்திரை மாதம் என்றாலே வெப்பம் போட்டு மண்டையை காய்ச்சும் என்று நமக்கு தெரியும். இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைகளின் மெல்லிய சருமத்தில் எளிதில் சின்னம்மை போன்ற வெப்பநோய்கள் வந்துவிடும். அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய்விடும்.

அதுமட்டுமல்லாமல், ஆடிமாதத்தில் தான் பருவமழையும் தொடங்குகிறது. இதனால் காற்று, தண்ணீரின் மூலம் ஏகப்பட்ட நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்த நேரத்தில் தம்பதிகள் இணைய போதும் கருவில் உதிக்கும் குழந்தைக்கு ரொம்ப ஈஸியாகவே நோய் தாக்க வாய்ப்புண்டு என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தான் இம்மாதத்தில் உடலுறவில் ஈடுபட்டால் தந்தைக்கு ஆகாது, அபச குணம், அம்மனுக்கு உகந்த மாதம் என பல காரணங்களை கூறி புதுமணத்தம்பதியரை பிரித்து வைக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்