Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரு கிலோ மாம்பழம் 3 லட்சமா..? அப்படி என்ன ஸ்பெஷல் அதுல....!! 

Nandhinipriya Ganeshan May 24, 2022 & 16:50 [IST]
ஒரு கிலோ மாம்பழம் 3 லட்சமா..? அப்படி என்ன ஸ்பெஷல் அதுல....!! Representative Image.

Japan Miyazaki Mango: இந்த வெயில் காலம் வந்துவிட்டாலே இரண்டு விஷயம் தான்ங்க ஒன்னு சுட்டெரிக்கும் சூரியன், மற்றொன்று நாக்கில் எச்சில் வரவைக்கும் மாம்பழம். பொதுவாக, கோடைக்காலத்தை மாம்பழ சீசன் என்று தான் சொல்வார்கள். அந்தவகையில், பழங்களின் ராஜா எனப்படும் மாம்பழத்தில் பல வகை உண்டு. ஆனால், மாம்பழத்திலேயே மிகவும் விலையுயர்ந்த மாம்பழம் ஒன்று இருக்கிறது. இது மற்ற மாம்பழங்களை எல்லாம் ஓரங்கட்டியுள்ளது. ஏனெனில், இதோட விலையை கேட்டால் நீங்களே ஷாக் ஆகி போய்டுவிங்க.. சரி அப்படி என்ன பா அதுல இருக்குனு தான கேட்கிறீர்கள். வாங்க விரிவாக பார்க்கலாம். 

ஜப்பான் மியாசாகி மாம்பழம் 

உலகிலேயே மிகவும் அதிக விலையுடைய மாம்பழம் தான் ஜாப்பான் மியாசாகி மாம்பழம் (Miyazaki Mango). இதன் பெயரைக் கேட்கும் போதே தெரிந்திருக்கும் இது எங்கு வளர்க்கப்படுகிறது என்று. ஆம், ஜப்பான் நாட்டின் குட்டி நகரமான மியாசாகியில் தான் வளர்க்கப்படுகிறது இந்த வகை மாம்பழம். இந்த மாம்பழம் ஒன்று 350 கிராம் எடையும், மற்ற மாம்பழங்களுடன் ஒப்பிடுகையில் 15% அதிக இனிப்பாகவும் இருக்குமாம். இந்த மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பீட்டா கரோட்டின் மற்றும் ஃபோலிக் அமிலம் (miyazaki mango benefits in tamil) அதிகளவில் காணப்படுகின்றன. 

மியாசாகி மாம்பழத்தின் வரலாறு

இந்த வகை மாம்பழம் 1980 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜப்பானின் மியாசாகி நகரில் தான் கண்டுபிடிக்கப்பட்டன. 1985 ஆம் ஆண்டு இரண்டு விவசாயிகள் இந்த மாம்பழத்தை அறுவடை செய்யத் தொடங்கினர், அதை தொடர்ந்து எட்டு விவசாயிகள் உடன் சேர்ந்துள்ளனர். ஆனால், மாம்பழத்தி உள்ள கரும்புள்ளிகள் மற்றும் அதிக சுவை இல்லாமல் இருந்தது. 

பொதுவாக, இயற்கையாகவே மரங்களில் இருந்து கீழே விழும் மாம்பழங்களின் சுவை மற்றும் இனிப்பு நாம் கையால் அறுவடை செய்யும் மாம்பழங்களை விட அதிகமாக இருக்கும். அதை அறிந்த அவர்கள் பின்னர் வலை அறுவடை முறையை தொடங்கினர். அதன் பிறகு, இம்முறையில் தான் அறுவடை செய்து வருகின்றனர். இந்த மாம்பழத்தின் அறுவடை காலம் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஆகும். 

சூரிய முட்டை (Egg of the Sun)

மியாசாகி மாம்பழம் வித்தியாசமான வடிவம் மற்றும் நிறத்தை கொண்டிருப்பதால், இதை ஜப்பானிய மொழியில் Taiyo no Tamago (சூரிய முட்டை) என்று அழைக்கப்படுகிறது. அதாவது, மாம்பழத்தின் வடிவம் முட்டை போலவும், நிறம் பிரகாசமான சிவப்பு நிறமாகவும் இருக்கும். இதில் நார்ச்சத்து கிடையாது. மாம்பழம் பச்சையாக இருக்கும் போது அது ஊதா நிறமாகவும் (Purple Mango), பழுக்கும் போது அது சிவப்பு நிறமாகவும் மாறுகிறது. 

மாம்பழத்தின் விலை ?

இந்த மாம்பழத்தை அறுவடை செய்ய ஏராளாமான விதிகள் மற்றும் விதிமுறைகள் இருக்கின்றன. இதில் இருக்கும் இரகசியமே இதுதான்.... அதாவது ஒவ்வொரு மாம்பழமும் மிகச் சரியான 350 கிராம் தான் இருக்குமாம். அப்படி கம்மியாக இருந்தால் அந்த மாம்பழத்தை சர்வதேச சந்தையில் இருந்து நீக்கப்படுமாம்.. அதுமட்டுமல்லாமல், நன்றாக பழுத்து விடுவதால் ஒவ்வொரு மாம்பழம் தனித்தனி பெட்டிகளில் தான் அடைத்து ஏற்றுமதி செய்வார்களாம். இவ்வளவு சவால்களை தாண்டி தான் மியாசாகி மாம்பழம் விற்பனைக்கு வருகிறது. ஒரு மாம்பழத்தின் விலை ரூ.3500, ஒரு கிலோ 2.5 முதல் 3 (Miyazaki mango price india) லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் மியாசாகி

இவ்வளவு விலையுயர்ந்த மாம்பழ மரங்கள் இந்தியாவிலும் (miyazaki mango india) சில இடங்களில் வளர்க்கப்படுகின்றன. விலை ரொம்ப அதிகமாக இருந்தாலும், பென்ஸ், MW காரில் வந்து வாங்கிச் செல்லும் அளவிற்குக் கூட்டம் அலை மோதுகிறதாம்.. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்