Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Optical Illusion Game: இந்த பாறைக்கு நடுவே ஒரு பெண்ணின் உருவம் இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க....

Nandhinipriya Ganeshan May 24, 2022 & 15:15 [IST]
Optical Illusion Game: இந்த பாறைக்கு நடுவே ஒரு பெண்ணின் உருவம் இருக்கு.. முடிஞ்சா கண்டுபிடிங்க....Representative Image.

Optical Illusion Game: நம்முடைய மூளையையும், கண்களையும் ஒரே நேரத்தில் வேலை செய்ய வைக்கும் மாயை தான் ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்கள். இவை ஓவியம் வடிவிலும், புகைப்படங்கள் வடிவிலும் இருக்கும். ஆனால், இரண்டிற்கும் அறிவு அதிகம் இருப்பவர்களால் தான் பண்ண முடியும். ஒரு ஓவியத்தை நன்கு சிந்தித்து, பல விதமான வடிவங்களை உள்ளே கொண்டே வந்து ஒரே தோற்றமாக வடிவமைப்பது தான் ஆப்டிக்கல் இல்யூசன் ஓவியங்கள். அதேபோல், ஒரு புகைப்பட கலைஞர் அல்லது நம்மில் ஒருவர் கூட ஒரு புகைப்படத்தை எடுத்து, அதை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அதில் ஏதோ ஒரு மாயை இருக்கும். இவை தான் ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்கள். 

முடிஞ்ச இந்த ஓவியத்தில் மறைந்துள்ள 9 முகங்களை கண்டுபிடிங்க...!

இரண்டு விதமான ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படுங்களுமே நமது மூளைக்கும், கண்ணுக்கும் வேலை கொடுப்பவை தான். அந்த வகையில், சமீப காலமாக சோசியல் மீடியாவிலும் இணையத்தளங்களிலும் இம்மாதிரியான புகைப்படங்கள் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. அந்த வகையில், இன்று ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்கள் நாம் பார்க்கும் போது ஒரு மாதிரியாகவும், மற்றவர்கள் பார்க்கும் போது வேறு மாதிரியாகவும் தெரியும். அதன் அடிப்படையில், நாம் முதலில் பார்க்கும் போது என்ன தெரிகிறதோ அதை வைத்து பார்ப்பவரின் ஆளுமையை குறிப்பிட்டு வருகின்றனர். 

சரி இந்த புகைப்படத்தை நன்றாக பாருங்கள். இதில் ஒரு பாறைகள் நிறைந்த ஒரு உயரமான மலைப்பகுதி போல் தெரிகிறது அல்லவா? இன்னைக்கு இதுதான் கேள்வி.. அதாவது இந்த பாறைகளுக்கு நடுவில் ஒரு பெண் மறைந்திருக்கிறார். முடிஞ்சா அதை கண்டுப்பிடிங்க... இந்த புகைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு Imgur என்ற சமூக ஊடகத் தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் உங்களால் அந்த பெண்ணை கண்டுப்பிடிக்க முடிக்கிறதா? நீங்கள் அந்த பாறையில் ஏதாவது பெண்ணின் உருவம் இருக்குமோ? என்று தானே யோசித்திருப்பீர்கள். ஆனால், தவறு பாறைகள் நிறைந்த அந்த இடத்தில் உண்மையான ஒரு சிறிய பெண் குழந்தை மறைந்திருக்கிறாள். அந்த படத்தில் ஊதா நிற ஹூடி போட்டுக் கொண்டு கேம்ராவை பார்த்து கை அசைக்கிறாள். இந்த பாறைகளுக்கு நடுவே உங்களால் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடிந்ததா? 

முடிஞ்சா இந்த போட்டோல ஒளிஞ்சிறுக்க ஆந்தைய கண்டுபிடிங்க பாக்கலாம்...

ஆனால், இதை கண்டுப்பிடிப்பது ரொம்பவே கஷ்டம் என்று பெரும்பாலானோர் அவர்களின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர். ஏனெனில் இந்த புகைப்படம் மிக தொலைவில் இருந்து எடுக்கப்பட்டது. ஒரு வேலை இந்த பெரிய பாறைகளுக்கு இடையில் இருக்கும் அந்த பெண்ணை கண்டுபிடித்துவிட்டால், உங்களுக்கு உண்மையாகவே கழுகு பார்வை திறமை இருக்கு. ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலை வேண்டாம் அதற்கான பதிலையும் அளித்துள்ளோம். இருந்தாலும், முடிந்த வரை முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய திறனை காட்டுங்கள்.

இதை உங்க நண்பர்களுக்கும் ஷேர் செய்து சேலஞ்ச் விடுங்கள்...!!

உங்க வீட்டை அலங்கரிக்கும் அழகான குட்டி குட்டி செடிகள்...!! இனி உங்க வீடும் மாடர்னாக தான் இருக்கும்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்