Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்ன கொடுமை இது.. 15வது முறையாக வார்னரை வீழ்த்திய பிராட்.. ஆஷஸ் தொடரில் சுவாரஸ்யம்

Iravaadhan Updated:
என்ன கொடுமை இது.. 15வது முறையாக வார்னரை வீழ்த்திய பிராட்.. ஆஷஸ் தொடரில் சுவாரஸ்யம்Representative Image.

பரிமிங்ஹாம்: ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னரை 15வது முறையாக வீழ்த்தி இங்கிலாந்து அணியின் முன்னனி வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் சாதனை படைத்துள்ளார்.

ஆஷஸ் தொடரில் வீசப்படும் ஒவ்வொரு பந்திற்கும் ரசிகர்களின் ஆரவாரம் கேட்டுக்கொண்டே இருக்கும். அப்படிதான்  டேவிட் வார்னருக்கு இங்கிலாந்து அணியின் பிராட் வீசிய ஒவ்வொரு பந்துகளும் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தது. காரணம், டேவிட் வார்னர் அதுவரை 14 முறை ஸ்டூவர்ட் பிராட்-டிடம் வீழ்ந்துருக்கிறார்.

இதனால் ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஸ்டூவர்ட் பிராட்டிடம் வார்னர் தப்பிக்க என்ன பயிற்சி செய்திருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது. நேற்று முதல் நாள் ஆட்டத்திலும் கடைசி நேரத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்தது விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தத்தை அதிகரிப்பதற்காக தான். அதற்காக தான் டேவிட் வார்னர் களமிறங்கிய உடன் பிராட் பந்துவீச அழைக்கப்பட்டார்.

என்ன கொடுமை இது.. 15வது முறையாக வார்னரை வீழ்த்திய பிராட்.. ஆஷஸ் தொடரில் சுவாரஸ்யம்Representative Image

ஆனால் நேற்று தப்பித்த டேவிட் வார்னர், இன்று அவரிடமே வீழ்ந்துவிட்டார். இதன் மூலம் டேவிட் வார்னரை பிராட் 15வது முறையாக வீழ்த்தி அசத்தியுள்ளார். வார்னர் விக்கெட் வீழ்ந்ததும் இங்கிலாந்து ரசிகர்களின் ஆரவாரம் உச்சத்தை எட்டியது.  இதுவரை டேவிட் வார்னருக்கு 734 பந்துகளை வீசியுள்ள பிராட், மொத்தமாக 397 ரன்களை விட்டுக் கொடுத்து 15 முறை விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

அதில் இங்கிலாந்து மட்டும் 329 பந்துகள் வீசி 158 ரன்களை விட்டுக் கொடுத்து 9 முறை விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஒரேயொரு செஷன் நின்றிருந்தாலே மொத்த ஆட்டத்தையும் மாற்றக் கூடிய வல்லமை உள்ள வார்னர், பிராட்டுக்காகவே நேந்துவிட்ட வீரர் போல் விளையாடுவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்