Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆபத்து.. ராகுல் டிராவிட்டை நீக்கும் முடிவில் பிசிசிஐ?

Iravaadhan Updated:
இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆபத்து.. ராகுல் டிராவிட்டை நீக்கும் முடிவில் பிசிசிஐ?Representative Image.

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு, தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய வீரர்களை ரசிகர்கள் காட்டமாக விமர்சித்து வருகின்றனர். இதனால் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் பிசிசிஐ தயாராகி வருகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் கூடவுள்ளது.

இதில் இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட்டை நீக்கிவிட்டு டெஸ்ட் அணிக்கு என்று பிரத்யேகமாக பயிற்சியாளரை நியமிக்க முடிவெடுக்கப்படலாம் என தெரிகிறது. இங்கிலாந்து அணியும் இதேபோன்ற மாற்றத்தை கடந்த ஆண்டு செயல்படுத்தியது. அதன் விளைவாகவே இங்கிலாந்து அணி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தற்போது டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என்று மூன்று வகையான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் தான் பயிற்சியாளராக உள்ளார். இந்திய அணி தற்போது அதிக போட்டிகளில் விளையாடுவதால் அது டிராவிட்டுக்கு கூடுதல் பணி சுமையை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் டிராவிட் தலைமையில் இந்திய அணி ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என மூன்று முக்கிய தொடரிலும் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆபத்து.. ராகுல் டிராவிட்டை நீக்கும் முடிவில் பிசிசிஐ?Representative Image

இந்த விவகாரங்கள் அனைத்தும் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவிக்கு பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் உலகக்கோப்பை தொடருடன் முடிவடைகிறது. இதனால் ராகுல் டிராவிட் பதவி காலத்தை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. இதனால் பிசிசிஐ தற்போது டிராவிட்டை நீக்கும் விதமாக டெஸ்ட் அணிக்கு பிரத்யேக பயிற்சியாளர் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு தனிப் பயிற்சியாளர் என இரண்டாகப் பிரிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் வரும் ஆசிய கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் என இரண்டிலும் ராகுல் டிராவிட் எவ்வாறு பயிற்சியாளராக செயல்படுகிறார் என்பதைப் பொறுத்தே அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்படும். இதனால் தற்போது டிராவிட்டின் பயிற்சியாளர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது .இதனை டிராவிட் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்