Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,050.89
561.90sensex(0.78%)
நிஃப்டி22,136.70
140.85sensex(0.64%)
USD
81.57
Exclusive

சிஎஸ்கேவுக்கு புது கேப்டன்.. தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பென் ஸ்டாக்ஸை வாங்கியதற்கு காரணம் இது தானா?

Sekar Updated:
சிஎஸ்கேவுக்கு புது கேப்டன்.. தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பென் ஸ்டாக்ஸை வாங்கியதற்கு காரணம் இது தானா?Representative Image.

சாம் கர்ரானைப் பெறுவதற்கான முயற்சி தோல்வியுற்ற நிலையில், சென்னை அணி பின்னர் ஜேசன் ஹோல்டருக்கும் ஏலப் போரில் இறங்கியது. இறுதியில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இந்த நடவடிக்கையை சிஎஸ்கே ரசிகர்கள், எம்எஸ் தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று பாராட்டி வருகின்றனர்.

கொச்சியில் இன்று நடைபெற்ற ஐபிஎல் 2023 மினி ஏலத்தின் போது சாம் கர்ரனுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில், கடைசியில் பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் குதித்து ரூ.18.5 கோடிக்கு கர்ரனை மீண்டும் கைப்பற்றியது. 

சென்னை அணி பின்னர் ஜேசன் ஹோல்டருக்கும் ஏலப் போரில் இறங்கியது. ஆனால் இறுதியில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதைத்தான் சிஎஸ்கே ரசிகர்கள் தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று பாராட்டினர்.

தோனி 2023 சீசனுடன் டாட்டா காட்டி விடுவார் என்பதால், அவருக்கு பதிலாக புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இதற்காக அவர்கள் கடந்த சீசனில் ரவீந்திர ஜடேஜாவை, சீசன் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தோனி விலகியதால் கேப்டனாக்கினர். ஆனால் ஜடேஜாவின் தலைமையில் சென்னை அணி படு மோசமாக தோற்று வந்த நிலையில். தோனி மீண்டும் கேப்டனானார்.

இந்நிலையில், ஐபிஎல் 2023 சீசனை தோனி தலைமையில் தான் எதிர்கொள்வோம் என சிஎஸ்கே கூறிவிட்டாலும், 2024 முதல் சென்னை அணியை பென் ஸ்டோக்ஸ் வழிநடத்துவார் என்றும், அதற்கான முன்னோட்டமாக 2023 சீசனிலேயே அவருக்கு சில போட்டிகளில் கேப்டன்சி பொறுப்பு கொடுக்கப்பட்டு சோதிக்கப்படும் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சிஎஸ்கே ரசிகர்களின் எண்ணம் பலிக்குமா? பென் ஸ்டோக்ஸ் தோனியின் இடத்தை நிரப்புவாரா? இதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்