Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐபிஎல் மினி ஏலம் 2023 லைவ் அப்டேட்ஸ் : நிக்கோலஸ் பூரனுக்கு ரூ.16 கோடி

Sekar Updated:
ஐபிஎல் மினி ஏலம் 2023 லைவ் அப்டேட்ஸ் :  நிக்கோலஸ் பூரனுக்கு ரூ.16 கோடிRepresentative Image.

ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் கடந்த உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட பல வீரர்களை வாங்குவதற்கு அணிகள் போட்டி போட்டு வருகின்றன.

அதன் படி ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் குறித்த தகவலை இதில் பார்க்கலாம்.

ஐபிஎல் மினி ஏலம் 2023 லைவ் அப்டேட்ஸ் :  நிக்கோலஸ் பூரனுக்கு ரூ.16 கோடிRepresentative Image
  • நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியான்சன் ரூ.2 கோடிக்கு குஜராத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
  • இங்கிலாந்தை சேர்ந்த ஹாரி புரூக் அதிகட்சமாக ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
  • மயங்க் அகர்வால் 8.25 கோடிக்கு சன் ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
  • அஜிங்கியா ரஹானேவை அடிப்படை விளையான ரூ.50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது 
  • மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் மற்றும் ரிலீ ரோசா எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.
  • சென்னை உள்ளிட்ட பல அணிகள் போட்டி போட்ட நிலையில், சாம் கர்ரன் இறுதியாக, ஐபிஎல் வரலாற்றில் அதிபட்ச தொகையாக 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
  • மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஓடியன் ஸ்மித் குஜராத் அணியால் அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு வாங்கப்பட்டார்.
  • ஜிம்பாப்வே அணியின் ஸ்டார் பிளேயர் சிக்கந்தர் ராசா அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
  • ஜேசன் ஹோல்டரை வாங்க சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே கடும் மோதல் நடந்த நிலையில், இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 5.75 கோடிக்கு வாங்கியது.
  • கேமரூன் கிரீனை வாங்க பல அணிகளும் போட்டி போட்ட நிலையில், இறுதியாக 17.5 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
ஐபிஎல் மினி ஏலம் 2023 லைவ் அப்டேட்ஸ் :  நிக்கோலஸ் பூரனுக்கு ரூ.16 கோடிRepresentative Image

  • சாம் கர்ரனை வாங்க கடும் போட்டி போட்டும் முடியாத நிலையில், பென் ஸ்டாக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.
  • வங்கதேசத்தின் சிறந்த வீரர்களில் ஒருவரான லிட்டன் தாஸை யாரும் வாங்கவில்லை.
  • வெஸ்ட் இண்டீசை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரணை ரூ.16 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வாங்கியது.
  • தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஹென்ரிச் கிளாசென் ரூ.5.25 கோடிக்கு சன் ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
  • குஷால் மெண்டிஸ், டாம் பெண்டன் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை
  • பில் சால்ட் 2 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்
  • கிறிஸ் ஜோர்டான் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை
  • ஜெயதேவ் உனத்கட் அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு ;லக்னோ அணியால் வாங்கப்பட்டார்.
  • ஆடம் மில்னே எந்த அணியாலும் வாங்கப்படவில்லை
ஐபிஎல் மினி ஏலம் 2023 லைவ் அப்டேட்ஸ் :  நிக்கோலஸ் பூரனுக்கு ரூ.16 கோடிRepresentative Image
  • ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜை ரிச்சர்ட்ஸன் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.1.50 கோடிக்கு வாங்கப்பட்டார்.
  • இஷாந்த் ஷர்மாவை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது
  • இங்கிலாந்து லெக் ஸ்பின்னர் அடில் ரஷீத் ரூ.2 கோடிக்கு சன் ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
  • மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த அகேல் ஹொசைன், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா, தென்னாப்பிரிக்காவின் தப்ரைஸ் ஷம்சி, ஆப்கானின் முஜீப் உர் ரஹ்மான் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை
  • அன்மோல்ப்ரீத் சிங், சேத்தன் எல்ஆர், ஷுபம் கஜூரியா, ரோஹன் குன்னும்மாள் ஆகிய வீரர்கள் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை.
  • ஷேக் ரஷீத் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் மினி ஏலம் 2023 லைவ் அப்டேட்ஸ் :  நிக்கோலஸ் பூரனுக்கு ரூ.16 கோடிRepresentative Image
  • விவ்ராந்த் சர்மா 20 லட்ச ரூபாய் அடிப்படை விலையில் களமிறங்கிய நிலையில், சன் ரைசர்ஸ் அணி 2.6 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
  • பிரியம் கார்க் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை
  • சமர்த் வியாஸ் 20 லட்சத்திற்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார்
  • சௌரப் குமார், கார்பின் போஷ் எந்த அணிகளாலும் வாங்கப்படவில்லை
  • சன்வீர் சிங் 20 லட்ச ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார்
  • அபிமன்யு ஈஸ்வரன் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை
  • நிஷாந்த் சிந்து 60 லட்சத்திற்கு சிஎஸ்கேக்கு விற்கப்பட்டுள்ளார்
  • ஷஷாங்க் சிங், சுமித் குமார், தினேஷ் பனா எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை
  • கே.எஸ்.பாரத் 1.20 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்
  • உபேந்திரா யாதவ் 25 லட்சத்திற்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார்
  • முகமது அசாருதீன் யாராலும் வாங்கப்படவில்லை
  • வைபவ் அரோராவை ரூ.60 லட்சத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது
  • யாஷ் தாக்கூர் ரூ.45 லட்சத்திற்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்
  • கே.எம்.யாசிப், முஜ்தபா யூசுப், லான்ஸ் மோரிஸ் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை
ஐபிஎல் மினி ஏலம் 2023 லைவ் அப்டேட்ஸ் :  நிக்கோலஸ் பூரனுக்கு ரூ.16 கோடிRepresentative Image
  • ரூ.40 லட்சம் அடிப்படை விலையில் பங்கேற்ற சிவம் மாவியை ரூ.6 கோடி கொடுத்து குஜராத் அணி வாங்கியுள்ளது
  • ரூ.20 லட்சம் அடிப்படை விலையில் பங்கேற்ற முகேஷ் குமாரை ரூ.5.5 கோடி கொடுத்து டெல்லி அணி கைப்பற்றியுள்ளது.
  • முருகன் அஸ்வின், இஷாருல்ஹுக் நவீத், சிந்தல் காந்தி, எஸ் மிதுன், ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோர் எந்த அணிகளாலும் வாங்கப்படவில்லை
  • ஹிமன்சு சர்மா அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்
  • பால் ஸ்டிர்லிங் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை
  • 2.4 கோடிக்கு பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டேவை டெல்லி அணி கைப்பற்றியுள்ளது
  • ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸே, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், டிராவிஸ் ஹெட், மந்தீப் சிங், டேவிட் மலான், டேரில் மிட்செல் ஆகிய வீரர்கள் எந்த அணிகளாலும் வாங்கப்படவில்லை
  • இங்கிலாந்தின் வில் ஜேக்ஸ் 3.2 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார்
  • ரோமாரியோ ஷெப்பர்ட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிறுவனத்திற்கு 50 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டார்
  • ஆஸ்திரேலியாவின் டேனியல் சாம்ஸ் ரூ.75 லட்சத்திற்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
  • முகமது நபி, வெய்ன் பார்னெல், ஜிம்மி நீஷம், தசுன் ஷனகா, ரிலே மெரிடித், தஸ்கின் அகமது, சந்தீப் ஷர்மா, துஷ்மந்த சமீரா, பிளஸ்ஸிங் முசரபானி, ஆகியோர் எந்த அணிகளாலும் ஏலம் எடுக்கப்படவில்லை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்