Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

CWG 2022 : காமன்வெல்த்தில் முதல் பதக்கம்.. வெள்ளி வென்றார் சர்கார்!!

Sekar July 30, 2022 & 16:30 [IST]
CWG 2022 : காமன்வெல்த்தில் முதல் பதக்கம்.. வெள்ளி வென்றார் சர்கார்!!Representative Image.

பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான 55 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

113 கிலோ எடையை தூக்கி ஸ்னாட்ச் போட்டியில் தெளிவாக முன்னிலை க்ளீன் அண்ட் ஜெர்க்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அங்கு தனது முதல் முயற்சியிலேயே 135 கிலோ எடையை உயர்த்தினார், பின்னர் 139 கிலோ தூக்கும் இரண்டு முயற்சிகளிலும் தோல்வியடைந்தார். அவர் மொத்தம் 248 கிலோ எடையை தூக்கி முடித்தார். 138 கிலோ எடையைத் தூக்கும்போது சர்காருக்கு காயம் ஏற்பட்டதால் அதற்கு மேல் எடையைத் தூக்க முடியவில்லை.

இந்நிலையில், மலேசியாவின் முகமது அனிக் 142 கிலோ எடையை கிளீன் அண்ட் ஜெர்க்கில் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். இது இந்திய வீரரை 2வது இடத்திற்கு தள்ளியது.

மொத்தமாக மலேசியாவின் முகமது அனிக் 249 கிலோ (107 கிலோ+142 கிலோ) தூக்கி தங்கப் பதக்கத்தையும், இலங்கையின் திலங்க இசுரு குமார 225 கிலோ (105 கிலோ+120 கிலோ) எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

மகாராஷ்டிராவின் சாங்லியைச் சேர்ந்த 21 வயது சங்கேத் சர்கார் 248 (113 கிலோ +135 கிலோ) எடையைத் தூக்கியதன் மூலம் வெள்ளி வென்றார்.

இதன் மூலம் காமன்வெல்த்தில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தொடங்கியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்