Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

பொங்கல் பண்டிகையில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டுகள் | Pongal Vilaiyattu Pottigal

Priyanka Hochumin Updated:
பொங்கல் பண்டிகையில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டுகள் | Pongal Vilaiyattu Pottigal Representative Image.

தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளும் பொங்கல் பண்டிகை தான் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இது உழவர்களுக்கனான பண்டிகை என்பதால் ஒவ்வொரு சிறப்புக்கும் என்று மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது தமிழர்களின் வீர விளையாட்டுகள் சில விளையாடி தங்கள் வீரத்தை வெளிப்படுத்துவார்கள். இது முற்றிலும் நம் மண்ணின் பெருமையையும், நம் மக்களின் வீரத்தையும் அங்கீகரிக்கும் விதமாக கொண்டாடப்படும்.

இருப்பினும் பொங்கல் பண்டிகை கிராமபுரத்தில் தான் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அங்கு பொங்கலின் போது விளையாடப்படும் சில விளையாட்டுக்களை இந்த பதிவில் பாப்போம்.

பொங்கல் பண்டிகையில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டுகள் | Pongal Vilaiyattu Pottigal Representative Image

ஜல்லிக்கட்டு

ஏறு தழுவுதல் என்று அழைக்கப்படும் ஜல்லிக்கட்டு தமிழ் மக்களின் வீர விளையாட்டு. ஆண்டு முழுவதும் உழவனுக்கு தோல் கொடுத்து விவசாயம் செய்ய உதவும் மாடுகளை தங்கள் குழந்தைகள் போல பார்த்துக்கொள்வார்கள் தமிழர்கள். மேலும் படிக்க...

பொங்கல் பண்டிகையில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டுகள் | Pongal Vilaiyattu Pottigal Representative Image

இளவட்டக் கல்

இது தற்போது பல இடங்களில் நடைமுறையில் இல்லை என்றாலும் நம் பாரம்பரிய வீர விளையாட்டாகும். அந்த காலங்களில் இளவட்டக்கல் தூக்கினால் தான் பெண் கொடுப்பார்கள். ஆண்களின் வீரத்தை போற்றும் விதமாக இந்த போட்டி நடைபெற்றாலும் பெண்களும் இந்த போட்டியில் கலந்துக்கொண்டு தாங்கள் வீரத் தமிழச்சி என்று உலகிற்கு காண்பிக்கின்றனர். மேலும் படிக்க...

பொங்கல் பண்டிகையில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டுகள் | Pongal Vilaiyattu Pottigal Representative Image

கபடி

தமிழ் மண்ணில் பிறந்த வீர விளையாட்டு கபடி. எனவே, பொங்கல் பண்டிகையில் போது கபடி போட்டி இல்லாமல் இருக்காது. கபடி போட்டி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதூகலத்துடன் பார்ப்பார்கள். இந்த போட்டியை சில இடங்களில் கௌரவதிற்காக விளையாடுகிறார்கள். மேலும் படிக்க...

பொங்கல் பண்டிகையில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டுகள் | Pongal Vilaiyattu Pottigal Representative Image

சேவல் சண்டை

ஆடுகளம் படம் வந்த பின்பு தான் பலருக்கும் சேவல் சண்டையின் மகிமை தெரிந்திருக்கும். ஆனால் கிராம புறங்களில் இதுக்கு தனி மவுசு உண்டு. இதற்காகவே ராணுவத்தில் வீரர்கள் தயாராவது போல சேவலை தயாரிப்பார்கள். இந்த போட்டி தமிழகத்தில் பல ஊர்களில் வித்தியாசமாக நடைபெறும். மேலும் படிக்க...

பொங்கல் பண்டிகையில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டுகள் | Pongal Vilaiyattu Pottigal Representative Image

ரேக்ளா ரேஸ்

தமிழகத்தில் மாட்டுப் பொங்கலின் போது ஜல்லிக்கட்டுக்கு அடுத்து விசேஷம் மாட்டு வண்டி போட்டி (ரேக்ளா ரேஸ்). தமிழர்களின் கண்டுபிடிப்பில் மிக முக்கியமான ஒன்று இந்த மாட்டு வண்டி. எடை மற்றும் நெடுந்தூரம் செல்லும் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது இந்த மாட்டு வண்டியால் தான். அப்ப இதற்கான போட்டி எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். மேலும் படிக்க...

பொங்கல் பண்டிகையில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டுகள் | Pongal Vilaiyattu Pottigal Representative Image

உறியடி

மனிதர்களின் ஆறாம் அறிவிற்கான விளையாடாக திகழ்கிறது உறியடி விளையாட்டு. இது பண்டிகை காலங்களில் மட்டும் அல்லாது மக்கள் ஒன்றாக கூடும் இடங்களிலும் நடைபெறும். கண்ணைக் கட்டிக்கொண்டு உயரத்தில் இருக்கும் பானையை கோல் கொண்டு அடிக்க வேண்டும். மேலும் படிக்க...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்