Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சோகம்.. பிரபல கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்!!

Sekar September 15, 2022 & 15:40 [IST]
சோகம்.. பிரபல கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்!!Representative Image.

2006 முதல் 2013 வரை ஐசிசி எலைட் பேனலில் அங்கம் வகித்த பாகிஸ்தானின் முன்னாள் நடுவர் அசாத் ரவுஃப், லாகூரில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அசாத் ரவுஃப் காலமானதைக் கேட்டு வருத்தமாக இருந்தது. அவர் ஒரு நல்ல நடுவர் மட்டுமல்ல, சிறந்த நகைச்சுவை உணர்வும் கொண்டவர். அவர் எப்போதும் அடுத்தவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பார். அவரது இழப்பிற்கு அவரது குடும்பத்தினருக்கு பல அனுதாபங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் போட்டியிலும், 2005 ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியிலும் ரவுஃப் நடுவராக இருந்தார். 2006 ஆம் ஆண்டில், ஐசிசியின் எலைட் பேனலில் அவர் இடம் பெற்றார். அவர் 2013 வரை அதில் அங்கம் வகித்தார்.

அவர் 64 டெஸ்ட் போட்டிகள், 139 ஒருநாள் போட்டிகள், 28 டி20கள் மற்றும் 11 பெண்கள் டி20களில் நடுவராக அல்லது டிவி நடுவராக பணியாற்றியுள்ளார்.

இது தவிர ஐபிஎல் போட்டிகள் உட்பட 40 முதல் தர போட்டிகள், 26 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 89 டி20 போட்டிகளிலும் நடுவராக பணியாற்றினார்.

மேலும் உள்நாட்டு அளவில் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்துள்ளார். ரவுஃப் 71 முதல் தர போட்டிகளில் விளையாடி 3,423 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 40 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 611 ரன்கள் எடுத்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்