Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐசிசி தரவரிசை.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா.. 14 இடங்கள் முன்னேறிய கோலி!!

Sekar September 14, 2022 & 19:58 [IST]
ஐசிசி தரவரிசை.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா.. 14 இடங்கள் முன்னேறிய கோலி!!Representative Image.

ஐசிசி ஆண்கள் டி20 அணிகளுக்கான சர்வதேச தரவரிசையை வெளியிட்ட நிலையில், இந்தியா 268 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. 

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை டி20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தோல்வியடைந்து வெளியேறிய நிலையிலும், தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. அதேநேரம் ஆசியக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், இரண்டாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளது. 

மேலும் ஆசிய கோப்பை 2022 வெற்றியாளரான இலங்கை 237 தரவரிசைப் புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தும், மூன்றாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவும் உள்ளன.

இதற்கிடையே ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் 2வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். தற்போது 2வது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் ஐடென் மார்க்ரம் உள்ளார். இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 4வது இடத்தில் உள்ளார்.

அதே நேரம் நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதன் மூலம் விராட் கோலி, 14 இடங்கள் முன்னேறி பட்டியலில் தற்போது 15வது இடத்தில் உள்ளார். 

பந்துவீச்சு தரவரிசையில், டாப் 10 பட்டியலில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் 7வது இடத்தில் உள்ளார். மேலும் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இந்தியாவின் ஹர்திக் பாண்டியா 7வது இடத்தில் உள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்