Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்!!

Sekar September 16, 2022 & 17:30 [IST]
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்!!Representative Image.

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய ஏ அணியை சஞ்சு சாம்சன் அணியை வழிநடத்த உள்ளார். மூன்று ஊறினால் ஆட்டங்களும் முறையே செப்டம்பர் 22, 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றன. 

இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி மூத்த இந்திய அணிக்கு வருவதற்கு இது ஒரு பெரிய சோதனையாக இருக்கும். சஞ்சு சாம்சன் இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்றாலும், அவர் சீரான தன்மையில் இல்லை. 

இதனால் இந்தியாவுக்கான டி20 உலகக் கோப்பை 2022 அணியில் அவரால் இடம் பெற முடியவில்லை. ஆனால் வரவிருக்கும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் அவர் இடம்பிடிக்கக் கூடும்.

சஞ்சு சாம்சன் தவிர்த்து நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு பிரித்வி ஷா. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ஐபிஎல் 2022 சீசனில் மிகவும் ஈர்த்த வீரர்களில் ஒருவரான ரஜத் படிதாரும் இதில் சேர்க்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் கேஎஸ் பாரத் அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பர்-பேட்டராக சேர்க்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவ், ராகுல் சாஹர் மற்றும் ஷாபாஸ் அகமது ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும், உம்ரான் மாலிக், குல்தீப் சென் வேகப்பந்து வீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய ஏ அணி : பிரித்வி ஷா, அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ரஜத் படிதார், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், ஷாபாஸ் அகமது, ராகுல் சாஹர், திலக் வர்மா, குல்தீப் சென், ஷர்துல் தாக்கூர். , உம்ரான் மாலிக், நவ்தீப் சைனி, ராஜ் அங்கத் பாவா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்