Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐபிஎல் 2023 : அதெல்லாம் நம்பாதீங்க.. நான் நிச்சயம் விளையாடுவேன்.. ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கேமரூன் கிரீன்!!

Sekar Updated:
ஐபிஎல் 2023 : அதெல்லாம் நம்பாதீங்க.. நான் நிச்சயம் விளையாடுவேன்.. ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கேமரூன் கிரீன்!!Representative Image.

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன், இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL 2023) தனது முதல் சீசனில் பங்கேற்க வாய்ப்பில்லை என வெளியான ஊகங்களை நிராகரித்தார். 

ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் கேமரூன் கிரீன் மும்பை இந்தியன்ஸால் ரூ. 16.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏலத்திற்கு முன்பு ஓய்வு பெற்ற புகழ்பெற்ற கீரன் பொல்லார்டின் இடத்தை ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டின் இரண்டாவது போட்டியில் கேமரூன் கிரீன் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து 3வது டெஸ்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

இதனால் கேமரூன் கிரீன் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் உடனான தனது பிக் பாஷ் லீக் தொடரையும் இழந்தார். இதனால் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு உடல்தகுதியை பெற்று விளையாடுவாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில், அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டில் காயம் காரணமாக பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல் பரவியது. இதனால் இவ்வளவு கோடி கொடுத்து எடுத்ததெல்லாம் வீணா என மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

இதையடுத்து தீயாய் பரவிய வதந்தி குறித்து விளக்கமளித்த கேமரூன் கிரீன், ஐபிஎல் 2023 இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நான் விளையாட மாட்டேன் என்று பரவும் தகவல் உண்மையல்ல என்று கூறி வதந்தியை நிராகரித்துள்ளார்.

எனினும், பிப்ரவரியில் இந்தியாவுக்கு எதிராக நடக்கும் முதல் டெஸ்டில் தான் விளையாடுவேனா என்பது தனது உடற்தகுதியை பொறுத்தது என்று கேமரூன் கிரீன் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்