Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ICC Player of the Month : பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்த இந்திய வீராங்கனை!!

Sekar September 05, 2022 & 20:02 [IST]
ICC Player of the Month : பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்த இந்திய வீராங்கனை!!Representative Image.

பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஐசிசியின் மாதாந்திர சிறந்த வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

இன்று தனது 22வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரோட்ரிக்ஸ், பார்படாஸ் அணிக்கு எதிராக எடுத்த 56 ரன்கள், இந்தியா அரையிறுதிக்கு முன்னேற உதவியது உட்பட சில முக்கியமான ஆட்டங்களை விளையாடினார். ஐந்து போட்டிகளில் 73 சராசரியுடன் 146 ரன்களுடன் இந்தியாவின் இரண்டாவது அதிக ரன் எடுத்தவர் ஆவார்.

வலது கை பெட்டரான ரோட்ரிகஸுடன், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி மற்றும் தஹ்லியா மெக்ராத் ஆகியோரும் இதே விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மூனி ஐந்து போட்டிகளில் 44.75 என்ற சராசரியில் 179 ரன்களை எடுத்ததன் மூலம் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் ஆவார். இந்த நிகழ்வில் அவர் இரண்டு அரைசதங்களை அடித்தார். 70 ரன்களே அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

காமன்வெல்த் போட்டிகளில் ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டதற்காக தஹ்லியா இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒரு அரைசதம் உட்பட 42.67 சராசரியில் 128 ரன்களை எடுத்த அவர், நிகழ்வின் அதிக ரன்களை எடுத்தவர்களில் ஒன்பதாவது வீராங்கனை ஆவார். ஆஸ்திரேலியாவின் வரலாற்று தங்கப் பதக்கத்திற்கான பயணத்தில் ஐந்து போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, அவர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

இதே போல் ஆண்கள் பிரிவில் இந்த மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா மற்றும் நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்