Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Manchester Premier League: கடைசி ஆட்டத்தில் அதிரடியாக வென்ற மான்சென்ஸ்டர் சிட்டி….! தங்கக் காலணி விருதைத் தட்டிச் சென்ற முதல் ஆசிய வீரர்…!

Gowthami Subramani May 23, 2022 & 10:15 [IST]
Manchester Premier League: கடைசி ஆட்டத்தில் அதிரடியாக வென்ற மான்சென்ஸ்டர் சிட்டி….! தங்கக் காலணி விருதைத் தட்டிச் சென்ற முதல் ஆசிய வீரர்…!Representative Image.

Manchester Premier League: பிரீமியர் லீக் கால்பந்து ஆட்டத்தில் 20 அணிகள் பங்கேற்றன. இதில், கலந்து கொண்ட ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை வீதம் மற்ற அணிகளுடன் மோத வேண்டும். வெற்றி பெற்றி அதிக ஸ்கோர்களைப் பெற்ற அணிகள் புள்ளியல் பட்டியலில் இடம் பிடிக்கும். இவ்வாறு புள்ளியல் பட்டியலில் அதிக ஸ்கோர்களைப் பெற்று முதல் இடத்தில் இருக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

தொடக்கத்தில் ஆஸ்டன் வில்லா அணி

2022 ஆம் ஆண்டின் பிரீமியர் லீக் கால்பந்து ஆட்டத்தில், நேற்று, மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஆஸ்டன் வில்லா அணிகள் மோதின. தொடக்கத்தில், ஆஸ்டன் வில்லா அணிகள் சிறப்பாக விளையாடி ஒரு கட்டத்தில், 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

அதிரடி ஆட்டம்

அதனைத் தொடர்ந்து ஆடிய ஆட்டத்தில், மான்செஸ்டர் சிட்டி அணி அதிரடியாக ஸ்கோர்களை அடித்து, இறுதியாக 3 கோல்களை அடித்து அசத்தல் வெற்றியைத் தழுவியது. மேலும், இதனுடன் சாம்பியன் லீக் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இது வரை நடந்த ஆட்டங்களில், மான்செஸ்டர் சிட்டி அணி கலந்து கொண்ட 38 போட்டிகளில் 29 வெற்றி, 3 தோல்விகள், மற்றும் 6 டிரா என 93 புள்ளிகளைப் பெறு முதலிடம் வகிக்கிறது.

வரலாற்றில் முதல் முறை

இந்தப் பிரீமியர் லீக் ஆடத்தில், அதிக கோல்களைப் பதவு செய்த வீரர்களாக முகமது சாலா மற்றும் தென் கொரிய வீரரான Son-Heung-min ஆகியோர் உள்ளனர்.  இதனால், இவர்கள் இருவரும் தங்கக் காலணி விருதைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கால்பந்து ஆட்டத்திற்கான ப்ரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர் விருதை வெல்வது இதுவே முதல் முறியயாகும். அதன் படி, தென் கொரிய அணிக்கு 98 போட்டிகளில் பங்கேற்று 31 கோல்களை அடித்துள்ளார். அவ்வாறு, முகமது சாலா விளையாடிய லிவர்பூல் அணி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், மான்செஸ்டர் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை