Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நம்பர் 7.. தோனியின் சாதனையை அசால்ட்டாக சமன் செய்த நியூசிலாந்து வீரர்!!

Sekar Updated:
நம்பர் 7.. தோனியின் சாதனையை அசால்ட்டாக சமன் செய்த நியூசிலாந்து வீரர்!!Representative Image.

நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 140 ரன்கள் எடுத்ததன் மூலம் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த போட்டியில் நியூசிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும், பிரேஸ்வெல்லின் ஆட்டம் மிகச் சிறப்பாக பேசப்பட்டது.

என்ன சாதனை?

25 ஓவர்களில் தனது அணி வெற்றிபெற 240+ ரன்கள் தேவை என்ற நிலையில், இன்னும் ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், நம்பர் 7-ல் நுழைந்த பிரேஸ்வெல், பதற்றமடையாமல் முகமது ஷமி வீசிய ஒரு ஓவரில் இரண்டு பவுண்டரிகளுடன் வேட்டையை தொடங்கினார். அதன் பிறகு மரண அடி தான்.

எனினும் மறுமுனையில் இருந்த டாம் லாதம் விரைவில் விக்கெட்டை இழந்தார். ஆனால் ஒன் மேன் ஆர்மியாக பிரேஸ்வெல் இந்திய பந்துவீச்சை சிதறடித்தார்.

இதனால், கில்லின் இரட்டை சதம் மூலம், இந்தியாவின் 349/8 ரன்கள் இன்னிங்ஸை மறந்து பிரேஸ்வெல் நியூஸிலாந்து அணிக்கு வெற்றியை பரிசளிப்பார் என பேச ஆரம்பித்தனர். ஆனால் இந்தியாவின் முகமது சிராஜ் 46வது ஓவரில் அவரது விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றி, இந்தியாவின் த்ரில் வெற்றிக்கு வழிவகுத்தார்.

ஆனால் இதன் மூலம் பிரேஸ்வெல் டோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். அவர் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை வெறும் 57 பந்துகளில் எடுத்தார். ஆடவர் ஒருநாள் போட்டிகளில் ஒரு நியூசிலாந்து பேட்டரின் மூன்றாவது அதிவேக சதம் இதுவாகும். 

பிரேஸ்வெல் எம்.எஸ். தோனியின் அரிய சாதனையை சதத்துடன் சமன் செய்தார். ஒருநாள் போட்டிகளில் நம்பர் 7 அல்லது அதற்கும் கீழே களமிறங்கி சதம் அடித்த ஒரே வீரர் என்ற முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்