Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டி20 லீக்.. புதிய அணியில் களமிறங்கும் தோனி.. செம அப்டேட்?

Sekar August 11, 2022 & 15:19 [IST]
டி20 லீக்.. புதிய அணியில் களமிறங்கும் தோனி.. செம அப்டேட்?Representative Image.

மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே தென்னாப்பிரிக்காவின் டி20 லீக்கில் தாங்கள் வாங்கியுள்ள அணியின் பெயரை எம்ஐ கேப் டவுன் என்று அறிவித்துள்ளது. இதேபோல் ஜோகன்னஸ்பர்க் அணியை வாங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர்களும் இந்த வாரம் தங்களது புதிய அணியின் பெயரை அறிவிக்க உள்ளனர்.

மிக முக்கியமாக, சிஎஸ்கேயின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் சிஎஸ்கேவின் அடையாளமாகத் திகழும் கேப்டன் எம்எஸ் தோனி ஆகியோர் இந்த அணியை வழிநடத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜோகன்னஸ்பர்க் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாக தகவல் கசிந்துள்ள நிலையில், ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என பெயர் சூட்டப்படலாம் என சிஎஸ்கே நிர்வாகத்திற்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

இருப்பினும், பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிட சில நாட்கள் ஆகும் என்றும், அதன் பிறகே அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களின் மற்ற உறுப்பினர்களை அணி நிர்வாகம் அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது. அப்போது தான் தோனிக்கு இதில் என்ன பங்கு என்பது குறித்து நமக்கு உறுதியாக தெரிய வரும்.

அதே நேரத்தில் ஸ்டீபன் ஃப்ளெமிங் தென்னாப்பிரிக்க சிஎஸ்கேவில் பங்கு கொள்வது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகவும், தோனியின் ஈடுபாடு பிசிசிஐயின் அனுமதியைப் பொறுத்தது என்றும், அவர் பிளேயராக இல்லாமல், பிசிசிஐ அனுமதித்தால் ஆலோசகர் போன்று ஏதேனும் ஒரு பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்