Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

"ஒரே அசிங்கமா போச்சு குமாரு".. கிரிக்கெட் வீரருக்கு பதிலாக ஆபாச நடிகையின் பெயரைக் கூறிய வர்ணனையாளர்!!

Sekar Updated:
Representative Image.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. போட்டி அவ்வளவு பரபரப்பாக இல்லை என்றாலும், விளையாட்டின் போது கமெண்டரியில் கூறிய ஒரு வார்த்தையால், சமூக ஊடங்களில் உலாவும் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் இங்கு திரும்பி விட்டது.

அப்படி என்ன நடந்திருச்சுனு கேட்குறீங்களா? பாகிஸ்தான் வர்ணனையாளர் ஒருவர், நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனி மோரிசனை குறிப்பிடுவதற்கு பதிலாக, ஆபாச பட நடிகையான டேனி டேனியல்ஸின் பெயரை கூறி குழப்பியுள்ளார். இந்த வீடியோ கிளிப் தான் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மாட் ஹென்றி மற்றும் அஜாஸ் படேல் இடையே 100 ரன்களுக்கு மேல் கடைசி விக்கெட் ஸ்டாண்ட் பற்றி பேசும்போது, ​​பாகிஸ்தான் வர்ணனையாளரும் முன்னாள் கிரிக்கெட்டருமான பாசித் கான், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டேனி மோரிசனை ஆபாச நட்சத்திரம் டேனி டேனியல்ஸ் என்று அழைத்தார். 

இந்த வீடியோ கிளிப் இணையத்தில் பரவத் தொடங்கிய நிலையில், அது சம்பந்தப்பட்ட நடிகையையும் விட்டுவைக்கவில்லை. நடிகை டேனி டேனியல்ஸ், "என்னை பயிற்சியாளராக வைக்கவும்" என்று அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பாகிஸ்தான் வர்ணனையாளரை கலாய்த்து தள்ள, அந்த வர்ணனையாளரோ, "ஒரே அசிங்கமா போச்சு குமாரு" என புலம்பி வருகிறாராம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்