பொங்கல் பண்டிகையின் போது நாம் குடும்பத்துடன் புத்தாடை அணிந்து, வண்ண கோலம் போட்டு, சூரிய பகவானை பிராத்தனை செய்து மகிழ்வோம். ஆனால் அதற்கு பின்பு என்ன செய்வோம் என்று யோசித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது. ஆனால் நாம் இருக்கும் தெரு அல்லது ஊரில் மக்கள் கொன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க பல விளையாட்டு போட்டிகள் நடைபெறும். இது முற்றிலும் ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ள மட்டுமே.
ஒருவேளை நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவர்களாக இருந்தால் பொங்கல் அன்று கொண்டாட முடியாது. எனவே, அதற்கு முன்பே கொண்டாட்டத்தை நடத்தி மகிழலாம். இந்த இரண்டு இடங்களில் கொண்டாடப்படும் சில ஃபன் கேம்ஸ்-களைப் பற்றி இந்த பதிவில் பாப்போம்.
ஒவ்வொரு பொங்கல் பண்டிகையின் போது இந்த போட்டி இல்லாமல் இருக்காது. பெண், ஆண் என்று யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். தங்களின் தனித்துவமையை காண்பித்து வண்ண நிறங்களால் கோலத்தை அழகு படுத்துவர். இறுதியில் பார்க்கும் போது எந்த கோலம் அழகாகவும், புதுமையாகவும் இருக்கிறியாதோ அது தான் வெற்றி பெற்றது. கோலத்தை போட்டவர்களுக்கு பரிசு பொருள் கொடுத்து மகிழ்வார்கள்.
இது ஆண்களுக்கான போட்டியாக கொண்டாடப்படும். முதலில் எளிமையாக ஒரு கருப்பை உடைக்க சொல்வார்கள். அடுத்தடுத்து இரண்டு, மூன்று, நான்கு என்று அதிகறித்துக்கொண்டே இறுக்கப்படும். இறுதி வரை யார் இருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளராக கருதப்படுவார்கள். இந்த விளையாட்டுப் போட்டி பார்ப்பவர்களை குதூகலப்படுத்தும் விதமாக அமைவதால் கண்டிப்பாக இந்த போட்டி நடைபெறும்.
இந்த போட்டி சிறியவர்கள், பெரியவர்கள் என்று யார் வேண்டுமானாலும் விளையாடலாம். போட்டி ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து ஒரு 100 அடி தூரத்தில் பெரிய பாத்திரம் அல்லது குடம் வைக்கப்படும். போட்டி தொடங்கும் இடத்தில் இருந்து போட்டியாளர்கள் சிறிய பாத்திரம் ஆல்லது டம்ளர் பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக நீர் எடுத்து அதை நிரப்பவும். யார் முதலில் தண்ணீரை நிரப்புகிறார்களோ அவர்களே வெற்றியாளர்.
இப்படி பொங்கல் பண்டிகையை சந்தோசமாக, குதூகலமாக கொண்டாட நிறைய போட்டிகள் இருக்கின்றது. உங்களுக்கு பிடித்த போட்டியை தேர்வு செய்து இந்த பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…