Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வயது வெறும் 16 தான்.. இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர்.. கலக்கும் தமிழக சிறுவன்!!

Sekar Updated:
வயது வெறும் 16 தான்.. இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர்.. கலக்கும் தமிழக சிறுவன்!!Representative Image.

இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிரனேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். ரில்டன் கோப்பையை வென்றதன் மூலம் அவர் இந்த தகுதியை பெற்றுள்ளார். ரில்டன் கோப்பை FIDE சர்க்யூட்டின் முதல் போட்டியாகும்.

செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆக, ஒரு வீரர் மூன்று கிராண்ட் மாஸ்டர் விதிமுறைகளைப் பெற வேண்டும் மற்றும் 2,500 எலோ புள்ளிகளின் நேரடி மதிப்பீட்டைக் கடக்க வேண்டும். 16 வயதான பிரனேஷ் ரில்டன் கோப்பைக்கு முன்னதாக கிராண்ட் மாஸ்டருக்கான மூன்று விதிமுறைகளை முடித்திருந்தார். ஆனால் 2500 புள்ளிகளை எட்டாமல் இருந்தார்.

இந்நிலையில், ரில்டன் கோப்பையில் களமிறங்கிய பிரனேஷ், எட்டு ஆட்டங்களில் வென்று, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும் இந்த போட்டியின் மூலம் 2500 எலோ புள்ளிகளையும் பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார்.

29 தேசிய கூட்டமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 136 வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் தமிழக வீரர் பிரணேஷ் முதலிடம் பிடித்தார். இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீரரான ஆர்.ராஜா ரித்விக் ஆறு புள்ளிகளுடன் எட்டாவது இடத்தைப் பிடித்தார்.

இந்த வெற்றிக்காக பிரனேஷ் 6.8 சர்க்யூட் புள்ளிகளுடன் FIDE சர்க்யூட்டின் ஆரம்ப தலைவராக உள்ளார். ஆண்டின் இறுதிக்குள் அதிகப் புள்ளிகளைக் குவிப்பவர் 2024 FIDE வேட்பாளர்களுக்குத் தகுதி பெறுகிறார். அவருக்கு புகழ்பெற்ற பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் பயிற்சி அளித்துள்ளார். 

அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பிரனேஷை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "FIDE சர்க்யூட்டின் முதல் போட்டியான ஸ்டாக்ஹோமில் நடந்த ரில்டன் கோப்பையை வென்று நாட்டின் 79வது கிராண்ட்மாஸ்டர் ஆனதற்காக பிரனேஷ் எம்.க்கு வாழ்த்துகள்!"எனத் தெரிவித்துள்ளது.

பத்தொன்பது வயதான கவுஸ்டாவ் சட்டர்ஜி சமீபத்தில் தேசிய சீனியர் செஸ் சாம்பியன்ஷிப்பின் போது நாட்டின் 78வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்