Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தோனியும் நானும்.. அது ஒரு காலம்.. உருகவைத்த கோலி!!

Sekar August 26, 2022 & 17:04 [IST]
தோனியும் நானும்.. அது ஒரு காலம்.. உருகவைத்த கோலி!!Representative Image.

விராட் கோலிக்கும் எம்எஸ் தோனிக்கும் இடையேயான பிணைப்பு ஒரு காலத்தில் டீம் இந்தியாவின் போட்டிகளின் சிறப்பம்சமாக இருந்தது. தோனி சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதிலிருந்து, ஒவ்வொரு சீசனிலும் அந்த தருணங்கள் அரிதாகிவிட்டன. தோனி இப்போதெல்லாம் ஐபிஎல்லில் மட்டுமே இடம்பெறுகிறார்.

இருந்தபோதிலும், தோனிக்கும் கோலிக்கும் இடையிலான பிணைப்பு எப்போதும் போல் வலுவாக உள்ளது. மேலும் 2022 ஆசிய கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக, கோலி ஜாம்பவான் எம்எஸ் தோனிக்கு இதயப்பூர்வமான மரியாதை செலுத்தியுள்ளார்.

Being this man’s trusted deputy was the most enjoyable and exciting period in my career. Our partnerships would always be special to me forever. 7+18 ❤️ pic.twitter.com/PafGRkMH0Y

— Virat Kohli (@imVkohli) August 25, 2022

கோலி தோனியுடன் சேர்ந்து எடுத்த ஒரு படத்தை நேற்று  சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். மேலும் இது செம வைரலானது. 33 வயதான கோலி அந்த பதிவில் , பாகிஸ்தானுக்கு எதிராக தனது 100வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடும் நிலையில், தோனியின் துணை கேப்டனாக இருந்த காலங்களை நினைவுபடுத்தினார்.

"இந்த நபரின் நம்பிக்கைக்குரிய துணை கேப்டனாக இருப்பது எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சிகரமான மற்றும் உற்சாகமான காலகட்டமாக இருந்தது. எங்களின் கூட்டாண்மை எனக்கு எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். 7+18 (இதய சின்னம்)." என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். கோலி ஜெர்சி எண்களான 7 மற்றும் 18 என்பதை சேர்த்து 25க்கு, (ஆகஸ்ட் 25) அவர் உணர்ச்சிகரமாக அந்த பதிவை வெளியிட்டிருந்தார்.

ட்வீட்டுடன் அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்த படம் 2016 ஆம் ஆண்டு மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை போட்டியின்போது எடுக்கப்பட்டது. அங்கு கோலி 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்