Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

33 லட்சம் ரூபாயில் அமெரிக்க வேலை..! இந்த காரணத்தால் வேலையைத் தள்ளிப்போட்ட நிறுவனம்...!

Gowthami Subramani July 26, 2022 & 17:25 [IST]
33 லட்சம் ரூபாயில் அமெரிக்க வேலை..! இந்த காரணத்தால் வேலையைத் தள்ளிப்போட்ட நிறுவனம்...!Representative Image.

இன்றைய இளம் தலைமுறையினர்கள் இணையதளம், சமூக வலைதளம் உள்ளிட்டவைகளில் அதிகமாக நேரத்தைச் செலவிடுகிறார்கள். தற்போதெல்லாம், 2 வயது முதலே டெக்னாலஜியையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். இன்றைய நவீன உலகத்தில், தொழில்நுட்பங்கள் வளர்வது போல, அதைக் கற்றுக் கொள்வதற்கான ஆர்வமும் பலரிடத்தில் அதிகரித்து தான் வருகிறது. மூளை சார்ந்த தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ள பெரும் ஆர்வத்துடன் புரோகிராமிங் உள்ளிட்டவற்றைக் கற்றுக் கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் அதையும், இதையும் பார்த்து வரும் இந்த இளம் தலைமுறைகளுக்கு மத்தியில் சில இளைஞர்கள் அதனை நல்ல விதமாக உபயோகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், வேதாந்த் டியோகேட் என்ற 15 வயது சிறுவன், இந்த சிறு வயதிலேயே தொழில்நுட்பங்களில் வல்லமை மிக்கவராக விளங்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

பழைய லேப்டாப்பில்

வேதாந்த் டியோகேட் தனது தாயின் பழைய லேப்டாப்பில் இன்ஸ்டகிராம் பக்கத்தைப் பார்த்து கொண்டிருந்த போது, வெப்சைட் டெவலப்மென்ட் போட்டிக்கான இணைப்பைப் பார்த்துள்ளார். ஆனால், இது அவர்களது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்பதை யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

போட்டியில் வெற்றி

இந்த போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்தார். இவருக்கு ஏற்கனவே வெப்சைட் டெவலப்மன்டில் அதிக ஆர்வம் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்தப் போட்டியில் கலந்து கொன்டு 2000-க்கும் அதிகமான வரிகளுடைய கோடுகளை எழுதி, இரண்டே நாள்களில் தனது பணியினை முடித்தார். குறிப்பாக, இந்தப் போட்டியில் அவர் வென்றது மட்டுமல்லாமல், ரூ.33 லட்சம் சம்பளத்தில் வேலையும் கிடைத்தது.

அதன் படி, ஜெர்சியைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் மனித வள மேம்பாட்டுக் குழுவில் அந்த இளைஞருக்கு பணியை வழங்கியது.

வயது ஒரு காரணம்

இவருக்கு அளித்த பதவியில், உடன் வேலை செய்யும் மற்ற ஊழியர்களுக்கு வேலையைப் பகிர்ந்து அவர்களை நிர்வகித்தாக வேண்டும். ஆனால், இவருடைய வயது 15 என்பதை அந்த நிறுவனம் கண்டறிந்த பிறகு, அந்த வேலையைத் திரும்பப் பெற்றது.

மீண்டும் அளிக்கப்படும்

இருந்தபோதிலும், சிறுவன் தனது பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, இந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது அந்த நிறுவனம்.

சாதனைகள்

இவர், வாதோடாவில் உள்ள நாராயண இ-டெக்னோவில் இருக்கும் அவரது பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் ரேடார் சிஸ்டம் மாதிரியை வடிவமைத்துத் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த வெப்சைட் டெவலப்மன்ட் போட்டியில் கலந்து கொண்ட இவர் animeeditor.com என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம், Blogs, Vlogs, Chatbot மற்றும் Video பார்க்கும் வசதிகளை வாடிக்கையாளர்கள் பெறுமாறு வைக்கப்பட்டுள்ளது. மேலும் Youtube வீடியோக்களை பதிவேற்றுமாறும் இந்த வெப்சைட் உள்ளதாகக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள 1000 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் இருந்து வேதாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது பெருமை மிக்கதாகக் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்