Thu ,Feb 29, 2024

சென்செக்ஸ் 72,500.30
195.42sensex(0.27%)
நிஃப்டி21,982.80
31.65sensex(0.14%)
USD
81.57
Exclusive

Monday Motivation: ‘பேக்பென்ச்சர்களுக்கும் திறமை உண்டு’ – சொந்த நிறுவனத்தின் மூலம் 2 கோடி வருமானம் அல்லும் மார்கண்டன்…

Nandhinipriya Ganeshan July 25, 2022 & 15:20 [IST]
Monday Motivation: ‘பேக்பென்ச்சர்களுக்கும் திறமை உண்டு’ – சொந்த நிறுவனத்தின் மூலம் 2 கோடி வருமானம் அல்லும் மார்கண்டன்…Representative Image.

Markandan Maharajan Success Story in Tamil: மனிதனாய் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் பல அவமானங்களையும், சறுக்கள்களையும், கஷ்டங்களையும், தோல்விகளையும் சந்தித்து தான் ஆகவேண்டும். ஆனால், அதையெல்லாம் கண்டு சிறிதும் அஞ்சாமல், அத்துனை தோல்விகளையும் வெற்றிக்கான படிகளாய் மாற்றி தையரியாமாக முன்னேறுபவர்களே இங்கு சாதனை படைக்கிறார்கள். அப்படி ஒவ்வொரு துறையிலும் பல சாதனை நாயகர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவரை பற்றி தான் தற்போது பார்க்கப்போகிறோம்.

மார்கண்டன் மகாராஜன், Shrewd Business Solutions என்னும் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ. இது ஒரு வெப் டிசைனிங் மற்றும் ஆப் டிசைனிங் நிறுவனம். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். சென்னை மற்றும் கோயம்பத்தூரில் செயல்பட்டு இந்நிறுவனத்தில் மொத்தம் 28 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தை பார்க்கையில், சுமார் ரூ. 2 கோடி என்று சொல்லப்படுகிறது. இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. இந்த மாபெரும் வெற்றிக்கு பின்னால் பல சுவாரஸ்யங்களும் ஆச்சர்யங்களும் புதைந்திருக்கின்றனர். அந்த கதையை தான் பார்க்கப் போகிறோம்.

விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் மார்கண்டன். இவருக்கு சொந்த ஊர் மதுரை. எல்லா அப்பாக்களுக்கும் இருப்பது போல் இவருடைய அப்பாவுக்கும் இவரை ஒரு இன்ஜினீயராக பார்க்க வேண்டும் என்ற ஆசை. அதற்காக, அரசு உதவியுடன் கூடிய பள்ளியில் 10வது வரை தமிழ் வழிக்கல்வியில் படித்துள்ளார். பின்பு காலேஜ் படிக்கும்போது இங்கிலீஷ் அவசியம் என்பதற்காக 11 ஆம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்விக்கு மாறியுள்ளார். பொதுவாகவே அனைவருக்கும் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாறும்போது சற்று சிரமம் உண்டாகும். அப்படி தான் இவருக்கும் நடந்தது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் ஃபெயில். ஆனாலும், கணித பாடத்தில் சென்டம். இதனால் மனமுடைந்த மார்கண்டனுக்கு அவருடைய அப்பா ஆதரவாக இருந்துள்ளார். அந்த தையரியத்தில் மீண்டும் மறுதேர்வு இருக்கிறார். அதிலும் தேர்ச்சியடைய முடியவில்லை. ஆனாலும், மனம் தளராத அவருடைய அப்பா மீண்டும் படிக்க சொல்ல, இரண்டாவது ஆண்டில் தேர்ச்சி பெற்றுவிட்டார்.

12ம் வகுப்பில் பிரேக் ஆனாதால் இன்ஜினீயரிங் கல்லூரிகளில் சீட்டு கிடைக்கவில்லை, சில கல்லூரிகளில் ஃபீஸ் அதிகமாகவும் இருந்துள்ளது. இதனால், B.Sc கம்யூட்டர் சயின்ஸ் படித்தால் கூட ஐடி நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று நண்பர்களை கூறுயதால் மதுரைக்கு சென்று ஒரு அரசு ஹாஸ்ட்டலில் தங்கி படிப்பைத் தொடங்கியுள்ளார். விவசாயக் குடும்பம் என்பதால், மார்கண்டன் படிப்பை தொடர்ந்துக் கொண்டே அருகில் உள்ள ஓட்டலில் ரூம் பாயாக வேலை பார்த்து, அதில் வரும் வருமானத்தை வைத்தே தன்னுடைய சொந்த செலவு மற்றும் 3 ஆண்டிற்கான காலேஜ் ஃபீஸையும் சாமாளித்துக் கொண்டுள்ளார்.

ஒருவழியாக பிஎஸ்இ படிப்பை முடிக்க, மீண்டும் நண்பர்கள் ஆலோசனையால் எம்சிஏ படிப்பை கோவை காருண்யாவில் இரண்டு வருடம் படித்துள்ளார். அப்போது கல்லூரியில் கேம்பஸ் இன்ட்டர்வியூ நடக்க, அதில் பங்கேற்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த மார்கண்டனுக்கு ஒரு பெரிய ட்விஸ்ட். M.N.C நிறுவனங்களில் பங்கேற்க வேண்டுமென்றால் எந்த விதமான அரியரும் இருக்கக் கூடாது என்பது நிறுவனத்தின் ரூல். 12ஆம் வகுப்பில் ஃபெயில் ஆனதால் எந்த M.N.C நிறுவனத்திலும் அவரால் தேர்வாக முடியாமல் போனது.

சரி, வேற ஊர்களிலாவது முயற்சித்து பார்க்கலாம் என்று சென்னைக்கு செல்ல, அங்கு நண்பர்களின் உதவியால் ஒரு சிறிய கம்பெனியில் ரூ.3000 சம்பளத்தில் வேலைக்கு சேர்கிறார். இரண்டு ஆண்டுகள் அப்படியே போக, பிறகு பெரிய வாய்ப்பாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதில் 5 வருடம் வேலை புரிந்து ஸ்டார்ட்அப் வேலையை கற்றுக்கொண்டுள்ளார். அதன்பிறகு, தான் அவருக்கு இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கு வேண்டும் என்ற ஐடியா தோன்றியுள்ளது. இதன்மூலம் திறமை இருந்தும் வேலைக்கிடைக்காமல் இருப்பவர்களுக்கு உதவ நினைத்து, செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிடுகிறார்.

இதனால், குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட, அதையெல்லாம் யோசிக்காமல் நிறுவனங்களுக்கு வேண்டிய வெப்சைட் மற்றும் ஆப் டிசைன் செய்யும் பிசினஸை தொடங்குகிறார். ஆரம்பத்தில் அவரே நேரடியாக சந்தித்து வாடிக்கையாளர்களை பிடித்துள்ளார். இவர்களுடைய சிறப்பான பணிக்கு பரிசு கொடுக்கும் விதமாக தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கினார்கள். அதன்பின், நம் சமூதாயத்தில் பேக் பென்ச்சர்ஸ் என்றாலே அலட்சியமானவர்கள் என்ற பிம்பத்தை உடைக்கும் நோக்கில் அவர்களுடைய திறமையை வெளியே கொண்டுவருவதற்காக அதுபோன்றவர்களை ஊழியர்களாக வேலைக்கு எடுத்துள்ளார். தற்போது இந்நிறுவனத்தில் 28 பேர் வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

தற்போது வரை, 150க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆப் மற்றும் வெப்சைட் டிசைன் செய்துள்ளனர். இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இப்படி வெற்றிகரமாக செயல்பட்டு வந்த Shrewd Business Solutions நிறுவனத்தின் சென்ற ஆண்டு வருமானம் 2 கோடி. இப்படி எல்லா தோல்விகளையும் வாழ்க்கையின் வெற்றிப்படிகளாக மாற்றி இந்த கால யங்ஸ்ட்டர்ஸ்-க்கு ஒரு முன்உதாரணமாக விளங்குகிறார் மார்கண்டன் மகாராஜன்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்