Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Monday Motivation: இயற்கை பொருட்களை விற்பனை செய்யும் நம்ம ஊரு ஈ-காமர்ஸ் தளம்.. கலக்கும் சேலத்து இளைஞன்..

Nandhinipriya Ganeshan September 26, 2022 & 19:30 [IST]
Monday Motivation: இயற்கை பொருட்களை விற்பனை செய்யும் நம்ம ஊரு ஈ-காமர்ஸ் தளம்.. கலக்கும் சேலத்து இளைஞன்..Representative Image.

சேலத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான திரு.சோமசுந்தரம், இயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய உதவும் வகையில் HcOrganic.com என்ற ஈ-காமர்ஸ் வர்த்தகத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இந்த காலத்தில் எத்தனையோ ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வந்துவிட்டன. இருப்பினும், விடாமுயற்சியுடன் புதுமையான யோசனையுடன் சோமசுந்தரம் தொடங்கப்பட்ட ஈ-காமர்ஸ் தளம் உருவான கதையை பற்றிய பார்க்கலாம்.

சோமசுந்தரத்தின் கல்வி & லட்சியம்:

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சோமசுந்தரம், 2013 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் பன்னாரி அம்மன் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஞினியரிங் முடித்துள்ளார். ஏழ்மையான குடும்பத்தை பிறந்த இவர் மும்பையில் 1 வருடம் பணிபுரிந்துள்ளார். சிறுவயது முதலே சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற கனவுடன் இருந்த சோமசுந்தரம், லட்சியத்தை அடைவதற்காக பலமுறை பலவழிகளில் யோசித்து, பல தொழில்களில் முயற்சி செய்து தோல்வியையும் அடைந்து இருக்கிறார். ஆனால், அந்த தோல்வியில் இருந்து ஒரு பாடத்தை கற்றுக்கொண்ட சோமசுந்தரம் 'எல்லோரும் செய்யும் பாதையில் நாமும் சென்றால் வெற்றிபெற முடியாது, நமக்கென்று தனியொரு பாதையை உருவாக்க வேண்டும்' என்று எண்ணினார். 

நிறுவனம் தொடங்குவதற்கான பின்னணி காரணம்:

சோமசுந்தரத்தின் அம்மா அடிக்கடி சொல்லுவார்களாம் 'நாங்கள் அந்த காலத்தில் அதிகமாக வேலை செய்தோ, 20 கி.மீ தூரம் என்றாலும் நடந்தே செல்லுவோம். நோய் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தோம்'. இதை ஆழமாக யோசித்து பார்த்த சோமசுந்தரம் இதற்கெல்லாம் அவர்கள் சாப்பிட்ட இராசாயனம் அல்லாத உணவுகளே என்பதை உணர்ந்துள்ளார். அதன்பின்னரே, நாமும் இராசாயனம் இல்லாத உணவுகளை மக்களை கிடைக்க உதவவேண்டும் என்று நினைத்துள்ளார். 

நாளுக்கு நாள் ஆன்லைன் மோகம் மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில், அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தார். அந்தவகையில், இராசாயன உரம் இல்லாத இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெற்று அதை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய  HcOrganic.com என்ற இணையதளத்தை 2017 மார்ச் அன்று தொடங்கினார். 

HcOrganic. com நிறுவனத்தின் சேவை:

100 சதுர அடியில் இவர் தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கு இணை நிறுவனர்கள் இல்லை. ஆரம்பத்தில் சில பேர் இருந்துள்ளனர், ஆனால் இயற்கை உணவு (Organic Product) பற்றிய தொழிலை செய்யலாம் என்றதும் விலகிவிட்டதாக சோமசுந்தரம் கூறுகிறார். அமேசான் பிளிப்கார்ட் போல உலக அளவில் இல்லாவிட்டாலும், இந்திய அளவில் இதை கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் சோமசுந்தரம். எனினும் பொருளாதார பிரச்சனை காரணமாக தற்போது தமிழகத்தில் மட்டுமே தனது சேவையை செய்து வரும் தோழருக்கு வாழ்த்துகள் சொல்லியே ஆக வேண்டும்.

தனக்கென ரெகுலர் வாடிக்கையாளர்களை வைத்திருக்கும், hcorganic.com, வாடிக்கையாளர் உள்ளூர் என்றால் ஆர்டர் செய்த அடுத்த நாளும், இதே வெளி மாவட்டங்கள என்றால் ஆர்டர் செய்த மூன்று நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

விவசாயிகள் டூ வாடிக்கையாளர்கள்:

இயற்கையான முறையில் எந்த ஒரு ரசாயனம் இல்லாத உணவு பொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், Organic பொருட்கள் விற்பனை செய்பவர்களும், இயற்கையை பாதிக்காத பொருட்களும் (பாக்குமட்டை தட்டு, பேப்பர் கப், மண் பானை போன்ற eco product) தயாரிப்பவர்களும் நம் இணைய தளத்தில் அவர்களின் பொருட்களை விற்பனை செய்யலாம். இயற்கை உணவுப் பொருட்கள் தேவைப்படும் பொதுமக்கள் இந்த இணையதளத்தில் வாங்கிக் கொள்ளலாம். இங்கு பெரும்பாலான பொருட்கள் விற்பனையாளர்களிடம் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுவதால் விலையும் குறைவாக தான் இருக்கும். 

வெற்றியின் இரகசியம்:

உண்மையில், எந்த ஒரு சொந்த தொழிலும் ஆரம்பத்தில் பல கஷ்டங்கள் சறுக்கல்கள் சவால்கள் இருக்க தான் செய்யும். இருப்பினும், மனதிற்கு பிடித்த ஒரு தொழிலை செய்யும் போது மனதளவில் நிம்மதி ஏற்படும். அது உங்களை பிற்காலத்தில் எல்லோரையும் போல் இல்லாமல் தனித்துவமாக நிலை நிறுத்திக் காட்டும் என்கிறார் சோமசுந்தரம்.

குறிப்பு: இந்த இணைய தளம் விரைவில் புதுப்பொலிவுடன் வர இருப்பதால் சில, தொழில் நுட்பம் சார்ந்த அப்டேஷன்கள் நடந்து கொண்டிருப்பதால் செயல்படாது. வாடிக்கையாளர்கள் சோமசுந்தரம்: 9025528607 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்