Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள இளம் ஸ்டார்ட்அப் நாயகர்கள்..

Nandhinipriya Ganeshan September 25, 2022 & 11:46 [IST]
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள இளம் ஸ்டார்ட்அப் நாயகர்கள்..Representative Image.

2022 ஆம் ஆண்டிற்கான ஹுருன் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் கௌதம் அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த ஒருவர் முதலிடம் பிடித்திருப்பது ஒன்றும் ஆச்சர்யமான விஷயம் கிடையாது. இருப்பினும், இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தங்களது விடாமுயற்சிகளின் மூலமும் புதுமையான யோசனையின் மூலமும் வாழ்க்கையில் பல சவால்களை முறியடித்து தற்போது பில்லியனர்களாக உருவெடுத்திருப்பது தான்.

அதாவது, ஹுருன் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இளம் ஸ்டார்ட்அப் நிறுவனர்களான அலக் பாண்டே (PhysicsWallah) மற்றும் கைவல்யா வோஹ்ரா (Zepto) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். யார் இந்த ஸ்டார்ட்அப் நாயகர்கள்? வாங்க பார்க்கலாம்.

ஜெப்டோ சொத்து மதிப்பு:

வெறும் 19 வயதே ஆன ஆதித் பாலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா என்ற இரண்டு நண்பர்களால் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உடனடி மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம் "ஜெப்டோ". இந்த இரண்டு நண்பர்களும் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் தாங்கள் விரும்பிய கணினி அறிவியல் படிப்பை விட்டுவிட்டு, ஒரு சொந்த தொழிலை ஆரம்பிக்க எண்ணினர். அப்படி உருவானதே இந்த ஸ்டார்ட்அப். இன்றைய காலக்கட்டத்தில் எத்தனையோ ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் இருக்கின்றன. 

ஆனால், அவற்றை எல்லாவற்றையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் சமர்த்தியமாக வணிகத்தை செயல்படுத்தி தற்போது இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஜெப்டோவின் மதிப்பு 50% க்கும் அதிகமாக அதிகரித்ததன் மூலமாக, சொத்து மதிப்பு 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்த மும்பை டீன்ஸ் முதல் இளம் இந்திய பில்லியனர் என்ற பெருமையையும் பெற்றுள்ளனர். 

பிசிக்ஸ் வாலா சொத்து மதிப்பு: 

பிசிக்ஸ் வாலா 2014 ஆம் ஆண்டு அலக் பாண்டே என்பவரால் முதன் முதலில் யூடியூப் சேனலாக தான் தொடங்கப்பட்டது. சமீபத்தில் பிசிக்ஸ் வாலா முதல் முறையாக 100 மில்லியன் டாலர்களை (Rs.750 crore) திரட்டி, யூனிகார்ன் கிளப்பில் தனது முதல் அடியை எடுத்து வைத்தது. இதுவே, இந்தியாவின் 101 வது எட்டெக் யுனிகார்ன் நிறுவனம் என்ற அந்தஸ்தையும் பெற்றது. 

அன்று ரூ.75 கோடி சம்பளத்தை நிராகரித்து... இன்று பல்லாயிரம் கோடிக்கு சொந்தக்காரர் ஆன அலக் பாண்டே... 

தற்போது PhysicsWallah நிறுவனத்தின் மதிப்பு 1.1 பில்லியன் டாலர் ஆகும். அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு மைல்கல்லை எட்டிய முதல் edtech நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பிசிக்ஸ் வாலாவின் இணை நிறுவனர்களான அலக் பாண்டே மற்றும் பிரதீக் மகேஸ்வரி ஆகியோரின் சொத்து மதிப்பு ரூ.4000 கோடியாகும். இதனடிப்படையில், இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 399 வது இடத்தை பிடித்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்