Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கூகுள் இந்தியாவின் ஸ்டார்ட்அப்ஸ் ஆக்சிலரேட்டர் திட்டத்தில் இடம்பிடித்த ஸ்டார்ட்அப்களின் பட்டியல்..!!

Nandhinipriya Ganeshan October 05, 2022 & 17:05 [IST]
கூகுள் இந்தியாவின் ஸ்டார்ட்அப்ஸ் ஆக்சிலரேட்டர் திட்டத்தில் இடம்பிடித்த ஸ்டார்ட்அப்களின் பட்டியல்..!!Representative Image.

இவ்வுலகில் ஆண்களுக்கு பெண்கள் என்றும் சமமானவர்கள் என்று ஒவ்வொரு முயற்சியிலும் சாதித்துக் காட்டுகிறார்கள். அந்தவகையில், வணிகத்துறையிலும் எங்களால் சாதிக்க முடியும் என்று மனஉறுதியுடனும், விடாமுயற்சியுடனும் கலமிறங்குகின்றனர். சாதித்தும் வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கூகுள் ஒரு பெரிய சவாலை (google for startups accelerator 2022) கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தி இருந்தது. 

இந்த புரோகிராம் இந்தியாவில் பெண்களால் நிறுவப்பட்ட அல்லது இணைந்து நிறுவப்பட்ட ஸ்டார்ட்அப்களில் மொத்தம் 20 ஸ்டார்டஅப்களை தேர்ந்தெடுத்து, மூன்று மாத திட்டத்தின் கீழ் அவர்களுக்கு நெட்வொர்க்குகளுக்கான அணுகல், நிதி திரட்டல், பணியமர்த்தல் சவால்கள், வழிகாட்டுதல் (mentorship) மற்றும் பிற பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் கூகுள் தெரிவித்திருந்தது. 

அதுமட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்அப்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், கிளவுட், யுஎக்ஸ், ஆண்ட்ராய்டு, வெப், தயாரிப்பு உத்தி மற்றும் வளர்ச்சி போன்ற துறைகளில் வழிகாட்டுதலையும் ஆதரவையும் பெறும். அந்த வகையில், கூகுள் இந்தியா தனது கூகுள் ஃபார் ஸ்டார்ட்அப்ஸ் ஆக்சிலரேட்டர் வுமன் ஃபவுண்டர்ஸ் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ஸ்டார்ட்அப்களின் முதல் குழுவை அறிவித்துள்ளது.

கூகுள் இந்தியா 400 விண்ணப்பங்களைப் பெற்றதாகவும், அதில் 20 பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்கள் முதல் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதோ பட்டியல்..

நிறுவனத்தின் பெயர்       நிறுவப்பட்ட ஆண்டு       தலைமையகம்           
Aspire for Her  2020 மும்பை
Brown Living  2019 மும்பை
CoLLearn Education 2019 பெங்களூர்
Commudle 2020 டெல்லி என்சிஆர்
Dubverse  2021 டெல்லி என்சிஆர்
Elda Health 2020 பெங்களூர்
Fitbots 2018 பெங்களூர்
FreeStand  2017 டெல்லி என்சிஆர்
Jumping Minds 2021 டெல்லி என்சிஆர்
LXME 2018 மும்பை
MeMeraki 2017 குருகிராம்
Mishry  2019 குருகிராம்
OPOD Audio  2022 மும்பை
PickMyWork 2019 குருகிராம்
Rang De 2008 பெங்களூர்
Savage 2021 பெங்களூர்
Sprint Studio 2021 மும்பை
The Bridge  2017 பெங்களூர்
TrackNow 2016 அகமதாபாத்
Tradyl 2021 பெங்களூர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்