Fri ,Jun 14, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57
Exclusive

இந்தியாவில் பணிபுரிய சிறந்த 25 ஸ்டார்ட்அப்கள்..

Nandhinipriya Ganeshan October 03, 2022 & 18:20 [IST]
இந்தியாவில் பணிபுரிய சிறந்த 25 ஸ்டார்ட்அப்கள்.. Representative Image.

நம்மில் பலரும் இன்னமும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நேரடியாகவோ அல்லது சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ தேடிக்கொண்டிருப்போம். அந்தவகையில் வேலை தேடுபவர்களுக்கும் சரி, வேலை ஆட்களை தேடுபவர்களுக்கும் சரி உதவும் முதன்மை சோசியல் மீடியா தளமான லிங்க்ட்இன், இந்தியாவில் உள்ள டாப் 25 ஸ்டார்ட்அப்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளது. 

25. ஜிப் எலக்ட்ரிக் - Transportation and logistics 

24. பாக்கெட் எஃப்எம் -  Internet  

23. ஸ்டான்ஸா லிவிங் - Hospitality 

22. அக்னிகுல் காஸ்மோஸ் - Defence and space

21. FamPay - Financial services 

20. லிவ்விங் ஃபுட் - Food and beverage

19. அல்ட்ராஹுமன் - Wellness and fitness

18. டீல்ஷேர் - Internet 

17. BlissClub - Retail and fashion

16. பார்க்+ - Internet 

15. கிளாஸ்பிளஸ் -  E-Learning 

14. ரேபிடோ -  Transportation and logistics 

13. Simpl - Consumer services 

12. டிட்டோ இன்சூரன்ஸ் - Financial services

11. ஷேர்சேட் - Internet

10. ப்ளூஸ்மார்ட் - Automotive

9. குரோத்ஸ்கூல் - E-learning 

8. தி குட் கிளாம் குரூப் - Internet 

7. ஸ்பின்னி - Retail motor vehicles 

6. எம்பிஏ சாய் வாலா - Food and beverage 

 

இந்தியாவில் பணிபுரிய சிறந்த 25 ஸ்டார்ட்அப்கள்.. Representative Image

5. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் - Space research and technology

தலைமையகம்: ஹைதராபாத்

முழுநேர பணியாளர்களின் எண்ணிக்கை: 200

பொதுவான திறன்கள் (Most common skills): விண்வெளி இன்ஜினியரிங், மெஷினிங் (machining), அறிவியல் கம்ப்யூட்டிங் (scientific computing)

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் முன்னாள் விஞ்ஞானிகளால் நிறுவப்பட்ட ஸ்கைரூட் ஏரோபேஸ் (Skyroot Aerospace), விண்வெளிக்கு பதிலளிக்கக்கூடிய, நம்பகமான மற்றும் பொருளாதார அணுகலுக்கான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. இந்த ஸ்பேஸ்டெக் நிறுவனம் இப்போது சிறிய செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல உதவும் ராக்கெட்டுகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் பணிபுரிய சிறந்த 25 ஸ்டார்ட்அப்கள்.. Representative Image

4. செப்டோ - Internet

தலைமையகம்: மும்பை

முழுநேர பணியாளர்களின் எண்ணிக்கை: 1,000

பொதுவான திறன்கள் (Most common skills): பிசினஸ் மேனேஜ்மெண்ட், டேட்டா சயின்ஸ், உற்பத்தி செயல்பாடுகள் (manufacturing operations)

10 நிமிடங்களுக்குள் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் ஒரு ஸ்டார்ட்அப் தான் செப்டோ (Zepto). வெறும் 19 வயதே ஆன ஆதித் பாலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா என்ற இரண்டு நண்பர்களால் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஸ்டார்ட்அப், கடந்த மே மாதம் பெற்ற நிதியின்படி யூனிகார்ன் அந்தஸ்த்தை நெருங்கியுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு $900 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் பணிபுரிய சிறந்த 25 ஸ்டார்ட்அப்கள்.. Representative Image

3. க்ரூவ் - Food and beverage services

தலைமையகம்: பெங்களூர்

முழுநேர பணியாளர்களின் எண்ணிக்கை: 680

பொதுவான திறன்கள் (Most common skills): டெவலப்மெண்ட் டூல்ஸ், வெப் டெவலப்மென்ட், டேட்டா சயின்ஸ்

டிஜிட்டல் முதலீடு தளமான Groww ல் பங்குகள் மற்றும் மியூட்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை வழங்கிவருகிறது. மேலும், 30 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

இந்தியாவில் பணிபுரிய சிறந்த 25 ஸ்டார்ட்அப்கள்.. Representative Image

2. அப்கிரேட் - E-learning 

தலைமையகம் : மும்பை

முழுநேர பணியாளர்களின் எண்ணிக்கை: 5,000

பொதுவான திறன்கள் (Most common skills): பிசினஸ் மேனேஜ்மெண்ட், கம்யூனிகேஷன், சேல்ஸ் ஆப்ரரேஷன்

ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற upGrad, தொழில் வல்லுநர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு திறமையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுகிறது. 

இந்தியாவில் பணிபுரிய சிறந்த 25 ஸ்டார்ட்அப்கள்.. Representative Image

1. க்ரெட் - Financial services

தலைமையகம்: பெங்களூர்

முழுநேர பணியாளர்களின் எண்ணிக்கை: 800

பொதுவான திறன்கள் (Most common skills): மென்பொருள் பொறியாளர் (Software engineer), வணிக ஆலோசகர் (business consultant), தயாரிப்பு ஆய்வாளர் (product analyst)

குணால் ஷாவால் நிறுவப்பட்ட, CRED இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் யூனிகார்ன்களில் ஒன்றாகும். சமீபத்தில் சீரிஸ் F நிதியுதவி உட்பட சுமார் $800 மில்லியனுக்கும் மேல் பெற்றுள்ளது. மேலும், 9 மில்லியன் செயலில் உள்ள பயனர்களை கொண்டிருப்பதாகவும் நிறுவனம் தெரிவிக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்