Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Startup Layoffs 2022: ஸ்டார்ட்அப் துறையில் என்ன தான் நடக்குது...? மீண்டும் மீண்டும் தொடரும் பணிநீக்கம்...!!

Nandhinipriya Ganeshan May 23, 2022 & 20:12 [IST]
Startup Layoffs 2022: ஸ்டார்ட்அப் துறையில் என்ன தான் நடக்குது...? மீண்டும் மீண்டும் தொடரும் பணிநீக்கம்...!!Representative Image.

Startup Layoffs 2022: கடந்த சில மாதங்களாகவே டெக் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு வருகின்றன. வட்டி விகித உயர்வு, வர்த்தகச் சரிவு, பணவீக்கம், ஆகியவற்றால் புது முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, ஸ்டார்ட்அப் துறையில் ஏராளமான நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில், பெங்களூருவை சேர்ந்த டிஜிட்டல் ஹெல்த் பிளாட்ஃபார்ம் MFine (Health Tech Startup MFine) என்ற ஸ்டார்அப் நிறுவனமும் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

MFine ஸ்டார்ட்அப்:

கடந்த வெள்ளிக்கிழமை அன்று MFine ஸ்டார்ட்அப் நிறுவனமானது சம்பளம் வழங்குவதற்கு நிதி இல்லாததால், சுமார் 600 ஊழியர்களை, அதாவது 75% பணியாளர்களை பணிநீக்கம் (Mfine Layoffs) செய்ததுள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு நிதி இல்லாமல் போய்விட்டது என்று தெரியாமல் சம்பளத்தை எதிர்ப்பார்த்து, காத்திருந்த ஊழியர்களுக்கு இந்த பணிநீக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஊழியர்கள் போராட்டம்:

இந்நிலையில், அந்நிறுவனம் மே மாதத்தில் 20 நாட்களுக்கான சம்பளத்தை செலுத்துவதாகவும், பொருந்தக்கூடிய அறிவிப்புக் காலத்தின் அடிப்படையில் மீதமுள்ள சம்பளம் அடுத்த 60 நாட்களில் வரவு வைக்கப்படும் என்றும் கூறியிருந்தது. பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இப்போது MFine 30 நாட்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் அறிவிப்பு காலகட்டம் அடுத்த 30 அல்லது 45 நாட்களில் வரவு வைக்கப்பட வேண்டும் என்றும் கோரி பெங்களூரு அலுவலகத்திற்கு வெளியே 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர். 

அதுமட்டுமல்லாமல், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இந்த நிறுவனம் தங்களுக்குத் தகுதியான கூடுதல் நேரப் பணம், ஊக்கத்தொகை மற்றும் விடுமுறைக் கட்டணம் எதையும் செலுத்தவில்லை என்றும் தெரிவித்தனர். 

அப்பாவி ஊழியர்கள்:

பல மணி நேரம் அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியதையடுத்து, இன்று, இரு ஊழியர்கள் அலுவலக வளாகத்திற்குள் பேச அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், MFine நிறுவனம் ஊழியர்களுக்கு 30 நாட்கள் சம்பளம் மற்றும் சில போனஸுடன் வழங்க ஒப்புக்கொண்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. பெங்களூரில் MFineக்கு சொந்தமான மூன்று அலுவலகங்கள் இருக்கின்றன, ஆனால் தற்போது ஒன்று மட்டுமே இயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், ராஜினாமா கடிதத்தை கொடுக்காவிட்டால் சட்டபடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்ததாக பல ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஊதியச் சீட்டுகள் (payslips) இல்லாததால் வேற வேலையும் கிடைக்குமா கிடைக்காத என்ற கவலையில் இருக்கின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்