Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்னதான் நஷ்டமாயிருந்தாலும் இப்படியா பண்றது..?? ஷாக்கில் ஊழியர்கள்..

Nandhinipriya Ganeshan July 12, 2022 & 17:15 [IST]
என்னதான் நஷ்டமாயிருந்தாலும் இப்படியா பண்றது..?? ஷாக்கில் ஊழியர்கள்..Representative Image.

கொரோனா காலத்தில் ஏராளாமான எட்டெக் ஸ்டார்ட்அப்கள் நல்ல வருவாயை ஈட்டி வந்த நிலையில், தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் அனைத்தும் தலைகீழாய் மாறிப்போனது. இதனால், யூனிகார்ன் நிறுவனங்கள் உட்பட பல ஸ்டார்ட்அப்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அதனால், செலவுகளை குறைக்கும் பட்சத்தில் பல எட்டெக் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை முன்னறிவிப்பு இன்றி கொத்துக் கொத்தாக பணிநீக்கம் செய்து வருவதை நாமும் கேள்விப்பட்டு வருகிறோம்.  

அப்படி பொருளாதார நெருக்கடியால் அடிவாங்கிய நிறுவனங்களில் அனாகாடமியும் ஒன்று. இதனால், செலவுகளை குறைப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 600 ஊழியர்களை -கிட்டத்தட்ட 10% பணியாளர்களை பணிநீக்கம் செய்திருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை, அதற்குள் மற்றொரு பேரதிர்ச்சியை மெயில் வழியாக கொடுத்துள்ளது பிரபல யூனிகார்ன்.

அதாவது, நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பி மெயிலில், அனாகாடமி கூடிய விரைவில் லாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்தவுள்ளதகாவும், தேவையற்ற செலவுகலை குறைப்பதாகவும் தெரித்துவித்துள்ளது.

அந்த மெயிலில் – 'இனிமேல், அலுவலத்தில் உணவு மற்றும் சிற்றுண்டி அனைத்தும் ஊழியர்களோ அல்லது மேனேஜர்களோ காசு கொடுத்து தான் வாங்கி வேண்டும். அதாவது, இனிமேல் இலவசமாக உணவு, சிற்றுண்டி வழங்கப்படமாட்டாது; ஊழியர்கள் உட்பட CXOக்கள், நிறுவனர்கள், கல்வியாளர்கள் என அனைவருமே நிறுவனத்தின் செலவில் வணிக வகுப்பில் பயணிக்க அனுமதி இல்லை; மேனேஜர்களுக்கும் நிறுவனர்களுக்கும் விரைவில் சம்பளம் குறைக்கப்படும்; CXOகளுக்கான பிரத்யேக டிரைவர்ஸ் போன்ற சலுகைகள் அகற்றப்படும்'என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இப்படி தான் நிறுவனம் செயல்படும் என்றும் நிறுவனர் அந்த மெயிலில் சுட்டிக்காட்டியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்