Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Idea Pattarai: மீண்டும் வருகிறது ஐடியா பட்டறை - இம்முறை சென்னையில்...!

Nandhinipriya Ganeshan May 15, 2022 & 11:30 [IST]
Idea Pattarai: மீண்டும் வருகிறது ஐடியா பட்டறை - இம்முறை சென்னையில்...!Representative Image.

Idea Pattarai: தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புகொண்ட பொருளாதாரமாக மாற்றும்பொருட்டு Dream Tamilnadu -ன் ஒருங்கிணைப்பாளர், சுரேஷ் சம்பந்தம் (Suresh Sambandam) தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் "ஐடியா (Idea) பட்டறை" என்ற முகாமை நடத்திவருகிறார்.

இதன் மூலம் பல்வேறு தொழில்முனைவோர்கள் பயனடைந்து வருகிறார்கள். அதே இலக்கோடு இம்முறை Idea பட்டறை முகாமை சென்னை மாநகராட்சியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் ஒழுங்கற்ற, கரடுமுரடான ஐடியாவை ஒழுங்குபடுத்தி, அதை ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்து, மெருகேற்றுவதே இந்தப் பட்டறையின் நோக்கம். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பக்கம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவங்கங்கள் உடனே விண்ணப்பித்து இம்முகாமில் கலந்துக்கொண்டு உங்களுடைய வணிகத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லுங்கள்.

ஸ்டார்டஅப் தொடங்க விரும்பும் யோசனைகளைக் கொண்ட ஆர்வமுள்ள அல்லது ஏற்கனவே உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கு மட்டுமே இதில் கலந்துக் கொள்ள அனுமதி உண்டு.

இந்த பட்டறையின் மூலம் நீங்கள் கீழ்க்கண்ட அனைத்தையும் கற்றுக் கொள்வீர்கள்!

  • உங்கள் சிறந்த வாடிக்கையாளர் சுயவிவரத்தை (ஐசிபி) புரிந்துகொள்வது மற்றும் செம்மைப்படுத்துதல்
  • உங்கள் ICP இன் தேவைகள் மற்றும் விருப்பங்கள் குறித்து ஆழமான தெளிவு பெறலாம்.
  • ஐசிபிக்கான உங்கள் தீர்வின் தனிப்பட்ட மதிப்பு முன்மொழிவு.
  • வாய்ப்புகள் மற்றும் சிக்கல்களை கொண்ட உங்கள் யோசனையைச் சரிபார்த்தல்.
  • சந்தை அளவைப் புரிந்து கொள்ளுதல் (TAM / SAM / SOM).
  • யூனிட் எகனாமிக்ஸ்
  • உங்கள் ஐடியாவை  அவர்களிடன் கூற 7 நிமிடங்கள் உங்கள் வழங்கப்படும்.
  • மற்ற சக நிறுவனர்களுடன் இணைந்து பணியாற்ற கற்றுக்கொள்ளலாம்.

இந்நிறுவனம் நடத்தும் ஒவ்வொரு முகாமிற்கும் பதிவு கட்டணம் உண்டு. ஒருவராக கலந்துக் கொண்டால் ரூ.1999 ம், இருவராக கலந்துக் கொண்டால் ரூ. 2999 ம், மற்றும் மூன்று பேராக கலந்துக் கொண்டால் ரூ. 3999 ம் கட்டணம் செலுத்த வேண்டும். இக்கட்டணம் அனைத்தும் ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

தேதி: மே 21, 2022

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்