Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

முன்பதிவு செய்தால் போதும்.. காரியம் முதல் அஸ்தி கரைப்பு வரை.. அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஸ்டார்ட்அப் நிறுவனம்..

Nandhinipriya Ganeshan Updated:
முன்பதிவு செய்தால் போதும்.. காரியம் முதல் அஸ்தி கரைப்பு வரை.. அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஸ்டார்ட்அப் நிறுவனம்..Representative Image.

இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி டெல்லியின் பிரகதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த trade fair ல் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்கேற்று வருகின்றனர். வித்தியாசமான யோசனைகளை கொண்ட நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றிருக்கும் நிலையில், மும்பையை சேர்ந்த் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

அப்படி என்னவா? இருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள். நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது. அது என்னவெனில், நமக்கான இறுதிச் சடங்கை முன்பதிவு செய்து வைத்துக்கொள்ளும் வகையிலான நிறுவனம் அது! மும்பையை சேர்ந்த 'சுகந்த் இறுதி சடங்கு மேலாண்மை' என்ற அந்த தனியார் நிறுவனம், சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது இறந்தவர்களின் உடலை வைப்பதற்கான பாடையை மூங்கில் கட்டையால் செய்து அதை பூக்களால் அலங்கரித்து வைத்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்கள். 

நீங்க கல்யாணத்த பாருங்க.. நாங்க செலவ பார்த்துக்குறோம்.. ஆஹா.. புதிய முயற்சியில் அசத்தும் பெங்களூரு ஸ்டார்ட்அப் நிறுவனம்...

முன்பதிவு செய்தால் போதும்.. காரியம் முதல் அஸ்தி கரைப்பு வரை.. அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஸ்டார்ட்அப் நிறுவனம்..Representative Image

இந்த நிறுவனத்தில் முன்பதிவு செய்தால் இறுதி சடங்கு செய்வதற்கான பண்டிதர்கள், முடி திருத்தம் செய்பவர், இறந்தவர்களை தூக்குவோர், சடலத்துடன் நடப்பவர், மந்திரங்கள் ஓதுவர் போன்ற அனைத்தையும் அந்த நிறுவனமே ஏற்பாடு செய்துவிடுமாம். அதுமட்டுமல்லாமல், இறந்தவரின் அஸ்தியை எங்கு கரைக்க வேண்டுமோ அங்கேயே கொண்டு சென்று அந்த நிறுவனமே கரைத்து விடுமாம். இந்த அனைத்து வேலைகளுக்கும் கட்டணமாக ரூ. 38,000 வசூலிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள சிறந்த 'விதை' முதலீட்டு நிறுவனங்கள்..

முன்பதிவு செய்தால் போதும்.. காரியம் முதல் அஸ்தி கரைப்பு வரை.. அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஸ்டார்ட்அப் நிறுவனம்..Representative Image

இதுக்குறித்து நிறுவனம் கூறுகையில், இதுவரை ஐந்து ஆயிரம் இறுதிச் சடங்குகளை செய்து முடித்து கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளோம். எதிர்காலத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை எட்டும் அளவுக்கு இலக்கும் நிர்ணயித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிறுவனம் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கலந்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். இருப்பினும், ஒரு சிலர் ஆதரவையும் தெரிவித்துவருகிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்