Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலகளவில் மூன்றாவது இடம் பிடித்த 'இந்தியா'... எதுல தெரியுமா?

Nandhinipriya Ganeshan August 13, 2022 & 11:00 [IST]
உலகளவில் மூன்றாவது இடம் பிடித்த 'இந்தியா'... எதுல தெரியுமா?Representative Image.

புதுடெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் டிஎஸ்டி ஸ்டார்ட்அப் உத்சவ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அப்போது 'இந்தியா ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பிலும், யூனிகார்ன்களின் எண்ணிக்கையிலும்  உலகளவில் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக' மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சிறப்புரையாற்றினார். 

மேலும், சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் தற்போது 105 யூனிகார்ன்கள் உள்ளன. அவற்றில் 44 யூனிகார்ன் ஸ்டார்ட்அப்கள் 2021ல் உருவானது என்றும், 19 யூனிகார்ன்கள் 2022ல் உருவானது என்றும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், கடந்த 8 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் வழங்கப்பட்ட PhDகளின் எண்ணிக்கையிலும் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 

நாட்டின் 75வது சுதந்திரத்தை கொண்டாடும் இந்தியா தற்போது 75,000 ஸ்டார்ட்அப்களின் தாயாக மாறியுள்ளது என்றார். மேலும் பேசிய அவர் - இத்தனை ஆயிரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இந்தியாவின் பெருநகரங்களை தாண்டி 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் இருந்து சுமார் 49% ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல், நாட்டில் ஐடி, விவசாயம், விமானப் போக்குவரத்து, கல்வி, எரிசக்தி, சுகாதாரம் மற்றும் விண்வெளித் துறைகள் போன்ற துறைகளில் அதிகளவில் ஸ்டார்ட்அப்கள் உருவாகி வருவதாகவும் அவர் கூறினார். 

விஞ்ஞான ஆராய்ச்சித் துறையில் உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாவும் மற்றும் விண்வெளி ஆய்வுத் துறையில் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது. அதுமட்டுமல்லாமல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான குவாண்டம் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார். 

Tags:

Startup ecosystem ranking 2022, Startup ecosystem ranking 2022 india rank, Startup News tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்