Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தன்னுடைய புதுமையான யோசனையால் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தன்நம்பிக்கை நட்சத்திரம் நவீன் திவாரி

Nandhinipriya Ganeshan October 26, 2022 & 18:30 [IST]
தன்னுடைய புதுமையான யோசனையால் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தன்நம்பிக்கை நட்சத்திரம் நவீன் திவாரிRepresentative Image.

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் எண்ணில் அடங்கா புதுத் தயாரிப்புகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவற்றையெல்லாம் நொடிக்கு நொடிக்கு நமது மொபைலில் அப்டேட் செய்வது எது? விளம்பரங்களே. சிலவற்றை நமது நண்பர்கள், குடும்பத்தினர், தெரிந்தவர்கள் மூலம் தெரிந்துக்கொண்டாலும், அனைத்து தகவல்களையும் ஒரு மனிதரால் கண்காணிப்பது என்பது சாத்தியமில்லாத விஷயம் தானே. ஆனால், அதை சாத்தியமாக்கி காட்டியுள்ளது “இன்மொபி” என்ற மொபைல் அட்வடைஸிங் நிறுவனம். “இந்தியாவின் முதல் யூனிகார்ன் ஸ்டார்ட் அப்” – Inmobi.

தன்னுடைய புதுமையான யோசனையால் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தன்நம்பிக்கை நட்சத்திரம் நவீன் திவாரிRepresentative Image

தன்நம்பிக்கை நட்சத்திரம் நவீன் திவாரி:

உத்திர பிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் நவீன் திவாரி. இவருடைய குடும்பமே கல்வியில் சிறந்து விளங்கியது. இவருடைய அப்பாவும், பாட்டியும் ஐஐடி கான்பூரின் முன்னாள் பேராசியர்களாம். அதேபோல் நவீனின் அத்தையும் ஐஐடியில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறாராம். இதனால் தான் நவீனும் ஐஐடி -யில் படிக்க வேண்டிய நிலை. அவரும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்தார்.

படிப்பு முடிந்ததுமே 2000 ஆம் ஆண்டு புகழ்பெற்ற கன்சல்டன்சி நிறுவனமான மெக்கின்சியில் வேலைக்கிடைக்க, மூன்று ஆண்டுகள் அதில் பணிபுரிந்தார். பின்னர், 2003 ஆம் ஆண்டு எம்பிஏ படிப்பதற்காக ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலுக்கு சென்றுவிட்டார். படித்துக் கொண்டே லாப நோக்கமற்ற "இந்தியா ஸ்கூல்ஹவுஸ் ஃபண்ட்" என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இது இன்னமும் நாட்டில் உள்ள கிராமப்புற பள்ளிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

தன்னுடைய புதுமையான யோசனையால் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தன்நம்பிக்கை நட்சத்திரம் நவீன் திவாரிRepresentative Image

ஒருவழியாக எம்பிஏ முடிக்க, மற்றவர்களை போல் சொந்தமாக பிசினஸ் செய்யலாம் என்பதையும் தாண்டி வேற லெவலில் சிந்தித்து தனக்கென சொந்த நிறுவனத்தையே உருவாக்க வேண்டும் என்று எண்ணி ஸ்டார்ட் அப் முயற்சியில் அடியெடுத்து வைக்கிறார் நவீன். அதற்காக ஒருவருடம் முழுவதும் அலைந்து திரிந்து பல்வேறு விஷயங்களை பரிசோதித்து 2007 ஆம் ஆண்டு mKhoj என்ற நிறுவனத்தை தொடங்குகிறார். இதன் வேலையே எஸ்எம்எஸ் மூலம் கேட்கப்படும் சந்தேகங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் பதிலளிப்பது தான். இந்த கான்செப்ட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் ஒரு கட்டத்தில் எஸ்எம்எஸ் விளம்பர நெட்வொர்க்காக மாற்றம் கண்டது.

தன்னுடைய புதுமையான யோசனையால் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தன்நம்பிக்கை நட்சத்திரம் நவீன் திவாரிRepresentative Image

சறுக்கள்களும் சாதனையும்:

எல்லா வெற்றிகளுக்கும் பின்னாலும் தோல்வி என்பது நிச்சயம் இருக்கும். அதுபோல mKhoj நிறுவனமும் சில சறுக்கள்களை கண்டது. அந்த காலத்தில் இவர் உபயோகித்த கான்செப்ட் புதிதாக இருந்தாலும், அதிக பயனர்களை கவர முடியாமல் போனது. இதனால், ஒருபக்கம் வருமானமும் குறைய ஆரம்பித்தது. ஒரு சந்தர்பத்தில் கம்பெனியை இழுத்து மூடவும் முடிவு செய்து, அதற்காக 8 பேர் கொண்ட மீட்டிங் ஒன்றை போட்டுள்ளனர்.

அப்போது பூத்ததுதான் mKhoj -ன் லேட்டஸ்ட் வெர்சன். அந்த காலக்கட்டத்தில் ஓரளவுக்கு எல்லோரும் இணையம் வசதி கொண்ட மொபைல்களை பயன்படுத்தி வந்தனர். அதுவே அவர்களுக்கு ஒருபெரிய பிளஸ் பாயிண்டாகவும் மைனஸ் பாயிண்டாகவும் அமைந்தது. அதாவது, எஸ்எம்எஸ் மூலம் செய்த அதே வேலையை இணையம் வழியாக செய்யலாம் என்று திட்டமிட்டனர். பின்னர், முழு கவனத்தை இணைத்தின் பக்கம் திருப்பியதோடு, இந்த புது முயற்சிக்கு ஏற்ற ஒரு பெயரையும் வைக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நடந்த புதிய முயற்சியை ஊக்குவிக்கும் விதமாக mKhoj பெயர் மாற்றம் செய்யப்பட்டு InMobi ஆக உருவெடுத்தது.

தன்னுடைய புதுமையான யோசனையால் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தன்நம்பிக்கை நட்சத்திரம் நவீன் திவாரிRepresentative Image

திருப்பு முனை:

அவர்களின் இரண்டாவது வெர்சனும் முதல் வெர்சனை போலவே பல சிரமங்களை எதிர்கொண்டது. ஆனாலும், எட்டு பேரும் மன உறுதியுடனு விடாமுயற்சியுடனும் சம்பளம் எதுவும் இல்லாமல் உழைக்க தொடங்கியுள்ளனர். அப்போது தான் இன்மொபிக்கு திருப்பு முனை காலம் பிறந்தது எனலாம். எல்லா சவால்களையும் முறியடித்து சிறந்த உழைப்பை கொடுக்க, முதலீட்டாளர்கள் பார்வை இன்மொபியின் பக்கம் திரும்பியது. அதாவது, நம்பிக்கையுடன் நவீன் க்ளீனர் பெர்கின்ஸ் காஃபீல்ட் & பையர்ஸின் அஜித் நஸ்ரா மற்றும் ஷெர்பலோ இன்வெஸ்ட்மென்ட்ஸின் ராம் ஸ்ரீராம் ஆகியோரை சந்தித்து நிதி திரட்ட முடிவு செய்து அவர்களை சந்தித்துள்ளார்.

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், இந்த சந்திப்பின் அரை மணி நேரத்திற்குள், நவீன் 8 மில்லியன் முதலீட்டிற்கான ஒப்பந்தத்துடன் கெத்தாக வெளியேறினார். இது அவர்களின் முழு வாழ்கையையுமே மாற்றியமைத்தது. இப்போது அவர்களுக்கு நிதி கிடைத்துவிட்டது; எனவே முன்பு போலல்லாமல், வேறுபட்ட சவால்களை ஒவ்வொரு நாளும் எதிர்க்கொண்டனர். அதனால், உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டியிருந்தது. இப்படி பாடுபட்டு ஆறு மாதங்களுக்குள், இன்மொபி மும்பையில் இருந்து பெங்களூருக்கு (2008) தங்களது கம்பெனியை மாற்றியது. அந்த வருடத்தின் இறுதியில் மட்டும் உலகம் முழுவதும் 4 அலுவலகங்களில் 50க்கும் மேற்பட்டோர் சேர்ந்தனர்.

தன்னுடைய புதுமையான யோசனையால் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தன்நம்பிக்கை நட்சத்திரம் நவீன் திவாரிRepresentative Image

இந்தியாவின் முதல் யூனிகார்ன்:

மேலும், 2011 ஆம் ஆண்டில் 205 நாடுகளில் 100,0000 வெளியீட்டாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களுடன் நிறுவனம் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தது. இன்மொபி உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் விளம்பர நெட்வொர்க்குகலில் ஒன்றாக அழைக்கப்பட்டது.

மேலும், பல நிறுவனங்களிடம் இருந்து பல மில்லியன் கணக்கான நிதி திரட்டல்களை பெற்று, அதன் மதிப்பு $579 பில்லியனாக உயர்ந்தது. 2021 ஆம் ஆண்டு Adtech ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் “இந்தியாவின் முதல் யூனிகார்ன்” என்ற அந்தஸ்த்தை பெற்றது.

அதைத் தொடர்ந்து கிளான்ஸ் என்ற Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தையும் நிறுவினார் நவீன். இது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை கொண்டு அவர்களுக்கு தேவையான விளையாட்டு, பொழுதுபோக்கு, ஃபேஷன் போன்ற துறைகளின் தகவல்களை மொபைல் போன் லாக் ஸ்கிரீனில் வழங்கப்படுகிறது. இன்மொபியின் துணை நிறுவனமான கிளான்ஸ் தொடங்கிய 2 ஆண்டுகளுக்குள் யூனிகார்னாக உருவெடுத்தது.

மிக குறுகிய காலத்தில் இரண்டு யூனிகார்ன்களை உருவாக்கி ஸ்டார்ட் அப் உலகில் பெரிய இடத்தை அடைந்த நவீன் திவாரியின் விடாமுயற்சியும், தைரியமும், பொறுமையும் இந்த கால தொழில்முனைவர்களுக்கு பெரிய உத்வேகம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்