Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சேலம், ஈரோடு -க்கு வரும் பெரிய ஐடி, டெக் நிறுவனங்கள்.... இனி ஜாலிதான்...வேலையில்லாதவர்களுக்கும் வேலை கிடைக்கும்…!!

Nandhinipriya Ganeshan June 19, 2022 & 15:30 [IST]
சேலம், ஈரோடு -க்கு வரும் பெரிய ஐடி, டெக் நிறுவனங்கள்.... இனி ஜாலிதான்...வேலையில்லாதவர்களுக்கும் வேலை கிடைக்கும்…!!Representative Image.

கொரோனா தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதால், ரிமோட் மற்றும் ஹைப்ரிட் மாடலை அனைத்து துறைகளும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. வரும் காலத்தில் டிஜிட்டல் தான் எதிர்காலம் என்பதால், தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் டிஜிட்டல் திறன் கொண்ட பணியாளர்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் என்றும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. 

இதேநேரத்தில் பொருளாதார நெருக்கடியால் அனைத்து நிறுவனங்களுக்கும் விலைவாசி மற்றும் செலவுகள் அதிகரித்து வருகின்றன. இதனால், பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

டிஜிட்டல் மற்றும் டெக் நிறுவனங்களின் ஊழியர்களுக்கான டிமாண்ட அதிகமாக இருக்கும் இந்த வேளையில், பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற திட்டமிடுகின்றனர். இதனால், நிறுவனங்கள் சிறு நகரங்களில் இருந்து அதிகளவிலான ஊழியர்களை தேர்வு செய்து அதே பகுதியில் ஆஃபீஸை அமைக்க திட்டமிட்டுள்ளது. 

இதன் மூலம் சிறிய நகரங்களில் இருக்கும் திறமை வாய்ந்த ஊழியர்கள், வேலையில்லாமல் தவிக்கும் மாணவர்களுக்கு பேரூதவியாக இருக்கும். இதனால், நாட்டில் வேலையில்லா பற்றாக்குறையை சரிசெய்ய முடியும். இதற்காக, 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட நகரங்களில் அலுவலகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளன. 

இந்த திட்டத்தின் படி, பெரிய நிறுவனங்கள் கோவை, ஜெய்ப்பூர், இந்தோர், ஹைதரபாத், ஈரோடு, சேலம், கொச்சின் போன்ற நகரங்களில் அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் வேலைவாய்ப்பு சந்தையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்