Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vikram-S: விண்ணில் பாயும் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்... வரலாறு படைக்கப்போகும் ஹைதராபாத் ஸ்டார்ட்அப் நிறுவனம்...

Nandhinipriya Ganeshan November 12, 2022 & 18:55 [IST]
Vikram-S: விண்ணில் பாயும் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்... வரலாறு படைக்கப்போகும் ஹைதராபாத் ஸ்டார்ட்அப் நிறுவனம்...Representative Image.

இந்திய விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களும் பங்கேற்கலாம் என கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, விண்வெளி துறையில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின. அதன் ஒரு பகுதியாக, ஹைதராபாத் ஸ்பேஸ்டெக் ஸ்டார்ட்அப் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace), இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இம்மாதம் இந்தியாவின் முதல் தனியாரால் உருவாக்கப்பட்ட ராக்கெட் 'விக்ரம்- எஸ்' -ஐ விண்வெளிக்கு அனுப்பி வரலாறு படைக்க உள்ளது.

Vikram-S: விண்ணில் பாயும் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்... வரலாறு படைக்கப்போகும் ஹைதராபாத் ஸ்டார்ட்அப் நிறுவனம்...Representative Image

எக்ஸ் - இஸ்ரோ இன்ஜினியர்ஸ்

2017 களின் பிற்பகுதியில், விண்வெளி தொழில்நுட்பத் துறையில் நிகழ்வுகளின் திருப்பம் மற்றும் உலகெங்கிலும் உள்ள தனியார் நிறுவனங்களின் தாக்கம் ஆகியவற்றைப் பார்த்து, இன்ஜினியர்களான நாக பரத் டாகா மற்றும் பவன் குமார் சந்தனா ஆகியோர் தனியார் துறையை தொடங்க முடிவெடுத்தனர். அதன்படி, 2015 ஆம் ஆண்டு இஸ்ரோவில் இன்ஜினியர்களாக வேலை செய்துக் கொண்டிருந்த நாக பரத் டாகா மற்றும் பவன் குமார் சந்தனா இருவரும் பணியிலிருந்து விலகி, 2018 ஆம் ஆண்டு தொழில்முனைவோர்களாக மாறினர். 

Vikram-S: விண்ணில் பாயும் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்... வரலாறு படைக்கப்போகும் ஹைதராபாத் ஸ்டார்ட்அப் நிறுவனம்...Representative Image

முதல் தனியார் ராக்கெட்

அன்று நம்பிக்கையுடன் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் இன்று விண்ணில் பாயும் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் என்ற மாபெரும் வரலாற்று சாதனைப் படைக்கவுள்ளது. இந்த திட்டத்திற்கு பிரரம்ப் (Mission Prarambh) என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த நவம்பர் 8 ஆம் தேதி நிறுவனம் இது குறித்த ட்வீட் ஒன்றை வெளியிட்டது, அதில் காலநிலையைப் பொறுத்து வரும் 12ல் இருந்து 16க்குள் விக்ரம்-எஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதன்படி, விக்ரம்-எஸ் வரும் நவம்பர் 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Vikram-S: விண்ணில் பாயும் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்... வரலாறு படைக்கப்போகும் ஹைதராபாத் ஸ்டார்ட்அப் நிறுவனம்...Representative Image

விக்ரம் பெயர் காரணம்

ஸ்கைரூட் நிறுவனம் விலைகுறைவான செயற்கைக்கோள்களை குறைந்த செலவில் அனுப்புவதையே நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், இந்திய விண்வெளி திட்டத்தின் நிறுவனரான விக்ரம் சாரபாய் நினைவாக ராக்கெட்டிற்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்