Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

K Startup Grand Challenge 2022: கோடிக் கணக்கில் மானியம் வழங்கும் உலகின் மிகப்பெரிய ஆக்சிலேட்டர் புரோகிராம்.... கடைசி தேதி வந்துரிச்சி.. உடனே அப்ளை பண்ணுங்க....!!!

Nandhinipriya Ganeshan May 26, 2022 & 20:25 [IST]
K Startup Grand Challenge 2022: கோடிக் கணக்கில் மானியம் வழங்கும் உலகின் மிகப்பெரிய ஆக்சிலேட்டர் புரோகிராம்.... கடைசி தேதி வந்துரிச்சி.. உடனே அப்ளை பண்ணுங்க....!!!Representative Image.

K-Startup Grand Challenge 2022: உலகில் மிகவும் வளர்ந்த மற்றும் தொழில்மயமான நாடுகளில் ஒன்றான தென் கொரியா, இன்று கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோரின் மையமாக உள்ளது. ஸ்டார்ட்அப்கள் மற்றும் வணிகங்கள் உலகளவில் தங்களுடைய வளர்ச்சியை மேம்படுத்த தென் கொரியாவில் நடக்கும் அனைத்து ஃபுரோகிம்களையும் எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள். அந்த வகையில், தற்போது k-startup grand challenge program குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  

தென் கொரியாவின் வருடாந்திர உலகளாவிய ஆக்சிலரேட்டர் திட்டமான K-Startup Grand Challenge இன் 2022 பதிப்பிற்கான விண்ணப்பங்கள் (global startup challenge) வரவேற்கப்படுகின்றன. உலகம் முழுவதும் இருக்கும் வாய்ப்புகளை நீங்க பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்றால், இது தான் சரியான நேரம்.. இன்னும் ஒரே வாரம் தான் இருக்கு, இதற்கான காலக்கெடு முடிவதற்கு உடனே அப்ளைப் பண்ணுங்க... இதுவரை, KSGC தென் கொரியாவில் 500 உலகளாவிய ஸ்டார்ட்அப்களை துரிதப்படுத்தியுள்ளது மற்றும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப ஆக்சிலரேட்டர்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

ஆசியாவில் உள்ள பிற முக்கிய நாடுகளுடன் கொரியாவின் வலுவான கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வலுவான வணிக மாதிரியை உருவாக்க நிபுணர்களின் வழிகாட்டுதலைப் பெறுங்கள்.

கே-ஸ்டார்ட்அப் கிராண்ட் சேலஞ்ச் என்றால் என்ன?

தென் கொரியாவின் பாங்கியோவில் நடைபெறும் இந்த புரோகிராமில் உலகம் முழுவதிலுமிருந்து 60 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்கேற்பார்கள்.

அங்கு, அலுவலக இடம், பயிற்சி ஆதரவு, உற்பத்திக்கான உபகரணங்கள், சேவை மேம்பாட்டு ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் ஊதியம் பெறும் வாழ்க்கைச் செலவுகள் ஆகியவற்றை நிறுவனங்கள் பெறுவார்கள். 

கலந்துக் கொள்ளும் நிறுவனங்கள் Samsung, LG, SK, Hyundai மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நெட்வொர்க் செய்யலாம். 

இந்த புரோகிராமின் இறுதியில், 30 ஸ்டார்ட்அப்கள் தங்கள் வணிகத்தை மேலும் மேம்படுத்த நிதியுதவி பெற தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

முதல் 10 ஸ்டார்ட்அப்கள் மொத்தம் USD 320,000 மதிப்பிலான சிறப்பு மானியங்களைப் பெறும், அதே நேரத்தில் முதல் 30 ஸ்டார்ட்அப்கள் ஜனவரி-ஏப்ரல் 2023 முதல் 3.5 மாதங்களுக்கு USD 11,136 (12,250,000 KRW) மதிப்புள்ள நிதியைப் பெறுவார்கள்.

அதுமட்டுமல்ல! வெற்றியாளருக்கு USD 120,000 (132,000,000 KRW) மானியமாக வழங்கப்படும். அதைத் தொடர்ந்து ரன்னர்-க்கு முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையே USD 70,000 (77,000,000 KRW), USD 40,000 (44,000,000 KRW), மற்றும் USD 25,000 (27.500,000 KRW) வழங்கப்படும்.

யார் விண்ணப்பிக்கலாம்?

  • பங்கேற்பாளர்கள், 7ஆண்டுகளுக்கும் குறைவாக செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருக்க வேண்டும். (அல்லது)
  • கொரியாவைத் தவிர வேறு ஒரு நாட்டில் குடிமகனாக குறைந்தபட்சம் 1 நிறுவனக் குழு உறுப்பினரை கொண்டிருக்க வேண்டும். 
  • AI, Blockchain, 5G, Big Data, E-commerce உள்ளிட்ட அனைத்து துறைகளிலிருந்தும் கலந்துக் கொள்ளலாம். 

Application period: May 31, 2022

Application review: June 7 - June 10

Global Audition: June 20 - June 24

Result Announcement: June 30

KSGC Program Period: August 1 – November 15, 2022

Apply Now

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்